இன்று டி20 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அமெரிக்கா நியூயார்க் நாசாவ் மைதானத்தில்நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் ஒரு குறிப்பிட்ட பாகிஸ்தான் வீரரிடம் இந்திய அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.
இந்திய அணி முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருக்கின்ற நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹர்பஜன்சிங் போட்டி குறித்து பேசும்பொழுது “முகமது ரிஸ்வான் ஒரு அற்புதமான வீரர் என்று நான் உணர்கிறேன். அவருடைய நாளில் அவர் அழிவுகரமான வீரராக இருப்பார். அவர் ஒரு மேட்ச் வின்னர். அவர் தனக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடும் வீரர். அப்படியான அவரது ஆட்டங்களை நான் பார்த்திருக்கிறேன். அதில் ஒன்று இந்தியாவுக்கு எதிராக வந்தது.
பாபர் அசாம் பேட்டிங் சற்று மெதுவாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக அவர்கள் உலகக் கோப்பை பெற்ற வெற்றியில் முகமது ரிஸ்வான் பங்கு பெரியதாக இருக்கிறது. அவர் முகமது சமியின் பந்துவீச்சில் முட்டி போட்டு அடித்தது எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
முகமது ரிஸ்வான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடிய சில போட்டிகளை பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் வலிமையான வீரர். அவரிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவரை சீக்கிரத்தில் வெளியேற்ற பார்க்க வேண்டும். அதற்கு பும்ரா சரியான பந்துவீச்சாளராக இருப்பார்.
இதையும் படிங்க : இன்னும் 1 விக்கெட்.. மகத்தான சாதனைக்கு காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா.. நடக்குமா இன்று?
பும்ரா பந்து உள்ளே வந்து பிறகு வெளியே செல்லும். இந்த நிலையில் அவரை விளையாடுவது மிகவும் கடினம். பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான் மட்டுமே சிறப்பானதை கொடுக்க முடியும். எனவே அவரை வெளியேற்ற பும்ராவை கொண்டு வந்து சீக்கிரத்தில் வேலையை முடிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.