நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எந்த மூன்று அணிகள் அரையிறுதியில் இருக்கும்? மேலும் இந்திய அணியை பாகிஸ்தான் அணி தோற்கடிக்கும் என சோயப் அக்தர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
2025 சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி இடம் பெற்று இருக்கும் குழுவில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து என மூன்று அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றில் மோதிக் கொள்ளும். எனவே இந்தப் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
தாமதமான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
இந்த நிலையில் தங்கள் அணியில் காயமடைந்திருக்கும் துவக்க ஆட்டக்காரர் சையும் அயூப் குணமடைவதற்காக பொறுமையாக காத்திருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது சாம்பியன்ஸ் டிராபி அணியை அறிவித்தது. இருந்த போதிலும் அவர் குணமடையாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக தற்பொழுது அமைந்திருக்கிறது. மேலும் அந்த அணியில் ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளராக அப்ரார் அகமது மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்.
அதே சமயத்தில் இந்திய அணியை பார்க்கும் பொழுது பேட்டிங் யூனிட்டில் இளமையும் அனுபவமும் சரிசமமாக கலந்த வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். பும்ரா இல்லாவிட்டாலும் கூட ஷமி இருப்பது இந்திய அணிக்கு பலமாகவே அமைந்திருக்கிறது. மேலும் சுழல் பந்துவீச்சாளர்களாக மூன்று சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
சோயப் அக்தர் செய்துள்ள கணிப்பு
இந்த நிலையில் நடைபெற இருக்கும் இந்த தொடர் குறித்து கணிப்பு வெளியிட்டிருக்கும் சோயப் அக்தர் தெரிவிக்கும் பொழுது “நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது முதிர்ச்சியை காட்டுவார்கள் என்றால், இந்த தொடரின் முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அமைந்திருக்கும். ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறக்கூடியதாக இருக்கிறது”
இதையும் படிங்க : 6,6,6,4,4 ஒரே ஓவரில் 26 ரன்கள் தந்த ஹர்சித் ரானா.. நம்பிக்கை கொடுத்த ரோகித்.. அப்புறம் நடந்த டிவிஸ்ட்
“மேலும் இந்த முறை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வெல்லும் என்று நான் மிக உறுதியாக நம்புகிறேன். மேலும் முதல் சுற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை பாகிஸ்தான் அணி வென்று இருந்தால், இந்தத் தொடரில் பாகிஸ்தான் அரைவாசியை வென்று விட்டதாக அர்த்தம். மேலும் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.