6,6,6,4,4 ஒரே ஓவரில் 26 ரன்கள் தந்த ஹர்சித் ரானா.. நம்பிக்கை கொடுத்த ரோகித்.. அப்புறம் நடந்த டிவிஸ்ட்

0
139

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரரான களம் இறங்கிய ஹர்ஷித் ரானா ஒரே ஓவரில் 26 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிற ஹர்ஷித் ரானா கம்பீரின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்து வருகிறார்.

இதன் காரணமாக இந்திய அணியில் டெஸ்ட், டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. அதோடு நிற்காமல் தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் ஹர்ஷித் ரானா அறிமுகமாகி இருக்கிறார். இந்த நிலையில் ஆர்ஸ்தீப் சிங் பதில் ஹர்சித் சேர்க்கப்பட்டதற்கு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். அதற்கு ஏற்றார் போல் ஹர்ஷித் ரானா ஓவரில் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் பில் சால்ட் ரன்களை வாரி குவித்தார்.

- Advertisement -

ஒரே ஓவரில் 26 ரன்கள்:

ஹர்சித் வீசிய மூன்றாவது ஓவரில் பில் சால்ட் 3 சிக்சர், இரண்டு பவுண்டரிகளை அடித்து ஒரே ஓவரின் 26 ரன்களை அடித்தார். இது ஹர்சித் ரானாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ரானா பந்துவீச்சில் இருந்து விலக்கப்பட்டார்.

இந்த சூழலில் பென் டக்கட் மற்றும் பில் சால்ட் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்தால் 43 ரன்கள் எடுத்திருந்தபோது பில் சால்ட் ரன் அவுட் ஆனார். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனை அடுத்து கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர் ஹர்ஷித் ரானா  மீது நம்பிக்கை இழக்காமல் அவரை மீண்டும் பந்து வீச அழைத்தார்.

- Advertisement -

மீண்டும் கம்பேக் கொடுத்த ஹர்சித்:

இதனால் தமக்கு கிடைத்த வாய்ப்பை ஹர்ஷித் சிறப்பாக பயன்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் பென் டக்கட்டுக்கு அபாரமாக ஷாட் பால் ஒன்றை வீசினார். அதனை பென் டக்கட்,  பில் சால்ட் ஆடும் போது ஜெய்ஸ்வாலின் அபார பில்டிங்கால் கேட்ச் ஆனார்.

இதை அடுத்து, மீண்டும் அதே ஓவரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் 143 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார். அதை அடிக்க முற்பட்டபோது பின்னால் கே எல் ராகுலிடம் கீப்பிங் கேட்ச் ஆனது.

இதனால் முதல் மூன்று ஓவரில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்த ஹர்ஷித் ரானா அடுத்த ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தையே தலைகீழ் மாற்றி இருக்கிறார். ஹர்ஷித் ரானா ரன்களை வாரி  வழங்கினாலும், விக்கெட்டுகளை எடுப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். மேலும் கேப்டன் ரோகித் சர்மா ஹர்ஷித் ரானா மீது வைத்த நம்பிக்கைக்கு அவர் விக்கெட் எடுத்து கைமாறு செய்திருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -