ஜிம்பாப்வே 2 சீரிஸ்.. ஆப்கான் அணி அறிவிப்பு.. 2 கேப்டன்கள்.. வெளி டூரில் சாதிக்குமா?

0
48
Afghanistan

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி விளையாட இருக்கும் வெள்ளைப்பந்து தொடர்களுக்கான அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான அணி பெரும்பாலும் இந்தியா அல்லது யுனைடெட் அரபு நாடுகளில் உள்ள மைதானங்களில் தங்களது கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகிறது. தற்போது ஜிம்பாப்வே நாட்டிற்கு வெளியில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. ஆசியாவுக்குள் சிறப்பாக செயல்படும் ஆப்கானிஸ்தான் வெளியில் எப்படி செயல்படும்? என்று எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயண விபரம்

இந்த முறை ஜிம்பாப்வே செல்லும் ஆப்கானிஸ்தான் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் டிசம்பர் 11ஆம் தேதி ஆரம்பித்து 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெற்று முடிவுக்கு வருகிறது.

இதற்கு அடுத்து ஆச்சரியப்படுத்தும் விதமாக ஆப்கானிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தத் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி ஆரம்பித்து ஜனவரி 2ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

2 ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிப்பு

தற்போது இதற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அணிகளில் டி20 அணிக்கு ரஷித் கான் கேப்டனாக இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு வழக்கம் போல் ஷாகிதி கேப்டனாக தொடர்கிறார். மேலும் காயத்தில் இருந்து வந்த நட்சத்திர வீர முஜிப்-உர்- ரகஹ்மான் மீண்டும் அணிக்கு திரும்பி வந்திருக்கிறார்.

டி20 அணி : ரஷீத் கான் (கே), ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), முகமது இஷாக் (வி.கீ), செடிகுல்லா அடல், ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய், முகமது நபி, தர்வீஷ் ரசூலி, ஜுபைத் அக்பரி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், அஸ்மத்துல்லா உமர்சாய், நங்ஜியலெப்ரோட்டி அஹ்மத், ஃபசல்ஹக் ஃபாரூக்கி, ஃபரீத் அகமது மற்றும் நவீன் உல் ஹக்.

இதையும் படிங்க : பும்ராவ சந்திக்க காத்துகிட்டு இருக்கேன்.. ஸ்பெஷல் பிராக்டீஸ் செய்றேன் – 19 வயது ஆஸி ஓபனர் பேட்டி

ஒருநாள் அணி : ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மத் ஷா (து. கே), ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), இக்ராம் அலிகில் (வி.கீ), அப்துல் மாலிக், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், ரஷித் கான், நங்யல் ஏஎம் கரோதி , முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி, பிலால் சமி, நவீத் சத்ரான், மற்றும் ஃபரித் அஹ்மத் மாலிக்.

- Advertisement -