பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி குறித்து தான் தவறாக பேசியதாக இந்திய ஊடகங்கள் தனது கருத்தைத் திரித்து பரப்பி விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் விளக்கம் அளித்திருக்கிறார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
பரவிய செய்தி
இந்த நிலையில் மொஹ்சின் நக்வி திறமையற்றவர், அவரிடம் பொறுப்பை கொடுத்ததுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிவதற்கு முக்கிய காரணம் என சோயப் அக்பர் கோபமாக கருத்து தெரிவித்ததாக இந்திய ஊடகங்களில் செய்தி பரவியது.
இந்த நிலையில் சோயப் அக்தர் தான் அவரை சொல்ல வில்லை எனவும் கிரிக்கெட் வாரியத்தின் உயர் பொறுப்புகளில் இருக்கும் மற்ற அதிகாரிகள் குறித்தே தான் பேசியதாகவும், இந்திய ஊடகங்கள் தன் பேச்சை மாற்றி பரப்பி விட்டன என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
நான் அப்படி பேசவில்லை
இதுகுறித்து சோயப் அக்தர் கூறும் பொழுது ” என் கருத்துக்கள் முழுக்க அவர் நோக்கியது கிடையாது. நான் பாகிஸ்தானின் திறமையற்ற நிர்வாகம் குறித்த பேசினேன். இந்திய சேனல்கள் சில என்னுடைய பேச்சை மாற்றி பரப்பி விட்டன. நான் அவர் குறித்து தவறாக பேசக்கூடாது என்று தான் மக்களிடமும் அந்த நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டேன்”
இதையும் படிங்க : இந்திய அணிக்குள் கருத்து வேறுபாடா.? இந்தியா பாக் போட்டியில் நடந்த நிகழ்வு.. ஆவேசப்பட்ட ஹர்திக்.. முகமது கைப் விளக்கம்
“எங்கள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மிகவும் நல்லவர். அவர் எங்களுக்கு ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவருடைய முயற்சிக்கு தகுந்த ஆட்களை அவரால் தேர்வு செய்ய முடியவில்லை. அதுதான் இங்கு பிரச்சனையாகி விடுகிறது” என்று கூறி இருக்கிறார்.






