வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மோசமாக தோல்வி அடைந்த காரணத்தினால், பாகிஸ்தான் வீரர்கள் தங்களுக்காக விளையாடாமல் நாட்டுக்காக விளையாட வேண்டும் என சோயப் அக்தர் விமர்சனம் செய்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 92 ரன் மட்டுமே எடுத்து சுருண்டது. மேலும் மூத்த வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் ஆமை வேகத்தில் விளையாடுவது பாகிஸ்தான் ரசிகர்களை வெறுப்படைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில் தொடர்ந்து பாகிஸ்தான் மூத்த வீரர்கள் இவ்வாறு இன்டெண்ட் இல்லாமல் மெதுவாக விளையாடி அணிக்கு தோல்வியை கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாதது மொத்த அணிக்கும் தொற்றிக் கொள்கிறது. இதனால் மாறிவரும் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் பாகிஸ்தான் அணியை மாற்ற முடியவில்லை.
இதுகுறித்து சோயப் அக்தர் பேசும்பொழுது “எங்களிடம் வெளிப்படையாக தாக்கி விளையாடும் திறமை கொண்ட அணி இருந்தது. நாங்கள் அப்படித்தான் விளையாடி வந்தோம். நாங்கள் யாரையும் நம்பி இருக்கவில்லை. பாகிஸ்தான் அணி தனி நபரை சார்ந்து எப்பொழுதும் இயங்கியது கிடையாது”
“நாங்கள் விளையாடும் பொழுது தப்பிப்பதற்கான வழியை யோசிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வீரர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக விளையாடுகிறார்கள். தங்களுடைய சராசரிக்காக விளையாடுகிறார்கள். வீரர்கள் தங்களுடைய நாட்டுக்காக விளையாட வேண்டும்”
இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் இந்திய ஆடக்கூடாதுனு கடவுளை வேண்டுகிறேன்.. வந்தா வேற மாதிரி ஆயிடும் – பாக் பசித் அலி பேட்டி
“நம்முடைய இன்டெண்ட் மற்றும் மனநிலையை மாற்றி நாம் நமக்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும். நாம் விளையாடி பழகி இருக்கும் ராவல்பிண்டி மைதானத்தில் ஆடுகளத்தை செல்லும் இடமெல்லாம் தூக்கிக்கொண்டு செல்ல முடியாது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.