“தம்பி நீ ஆட்டத்தை விட்டுக் குடுக்கிற.. 50 ஓவர் போட வைக்கிற” – பாபர் அசாம் கேப்டன்சி மீது சோயப் அக்தர் விமர்சனம்!

0
2237
Akthar

உலகக் கிரிக்கெட்டில் தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி சில வாரங்களுக்கு முன்பு முதல் இடத்தை பிடித்திருக்கிறது. தொடர்ச்சியாக அந்த அணியின் வெள்ளைப் பந்து செயல்பாடுகள் சிறப்பாக இருந்து வருகிறது!

பாகிஸ்தான் அணியின் இந்த உயர்வுக்கு மிக முக்கிய காரணங்களாக இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அந்த அணியின் பவுலிங் யூனிட்டை மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து தாங்கி பிடிக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் யூனிட்டை தனி ஒருவராக பாபர் அசாம் தாங்கி பிடிக்கிறார். அந்த அணி பேட்டிங்கில் அவரைச் சுற்றிய விளையாடி வருகிறது. அந்த அளவிற்கு அவர் தொடர்ந்து சீராக ரன்களை குவித்து வருகிறார். மேலும் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

தற்பொழுது ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருவது நாம் அறிந்ததே. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளை வென்று ஒரு போட்டி டிரா ஆகி உள்ளது.

- Advertisement -

இந்த மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி பந்து வீசி இருக்கிறது. பாபர் அசாம் சிறந்த ஒரு பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரது கேப்டன்சி மேல் விமர்சனம் இருக்க செய்கிறது. அவர் தன் அணியின் பவுலின் யூனிட்டின் ஆயுதங்களான வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம் சுமாராக இருக்கிறது.

பாபர் அசாம் தொடர்ச்சியாக ஒரு முனையில் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து தாக்கி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக கைப்பற்றும் தாக்குதல் பாணியில் கேப்டன்சி செய்வதில்லை. இது குறித்து இந்திய லெஜெண்ட் கவாஸ்கர் அவருக்கு இந்தியா நன்றி கடன் பட்டிருக்கிறது என்று நகைச்சுவை செய்யும் அளவுக்கு இருந்தது.

தற்பொழுது இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்பர் கூறும் பொழுது
“பாபர் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு இவ்வளவு ஓவர் கொடுத்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவரால் ஒரு முனையில் வேகப்பந்து வீச்சையும் இன்னொரு முனையில் சுழற் பந்து வீச்சையும் தொடர்ந்து வைத்திருக்க முடியும். இந்த இடத்தில்தான் நான் பாபருடன் உடன்படவில்லை. அவர் சுழற் பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தினார். ஆட்டத்தை விட்டுக் கொடுத்தார்.

அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கேப்டனாக இப்பொழுது நல்லபடியாகவே இருக்கிறார். பாபரின் மனநிலை ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். அவர் விக்கட்டுகளை வீழ்த்துவது மற்றும் எதிர் அணியை ஆல் அவுட் செய்வது குறித்து எப்பொழுதும் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் 50 ஓவர் களை முழுமையாக வீச பந்துவீச்சாளர்களை!” விடக்கூடாது என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -