நேற்று ஆசியக் கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக இந்திய வீரர் சிவம் துபே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். கம்பீர் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு தன்னுடைய பந்துவீச்சு சிறப்பாக இருப்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
இந்திய அணிக்கு கம்பீர் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு சிவம் துபே விளையாடி உள்ள ஏழு போட்டிகளில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதற்கு முன்பாக அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் பந்து வீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் ஐபிஎல் தொடரிலும் இதே சூழ்நிலைதான் இருந்து வருகிறது.
ஹர்திக்தான் முக்கிய காரணம்
நேற்றைய போட்டியில் மூன்றாவது வேகப்பந்து பேச்சாளராக இடம் பெற்ற சிவம் துபே இரண்டு ஓவர்களில் நான்கு ரன்கள் மட்டும் விட்டு தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். மேலும் பந்துவீச்சில் அவருடைய லென்த் மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. இத்தோடு அதிகபட்சமாக பந்துகளை ஸ்டெம்ப் நோக்கி பேசி இருந்தார்.
இதுகுறித்து சிவம் துபே பேசும்பொழுது “என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக மாறுவதற்கு பின்னால் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய அனுபவம் இருக்கிறது. பேட்டிங் குறித்தும் அவரிடம் நான் நிறைய கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறேன். என்னை அவருடன் நான் ஒப்பிட்டுக் கொள்ள மாட்டேன். ஆனால் அவரிடமிருந்து நான் கற்று வருகிறேன்”
மோர்கல் கொடுத்த டிப்ஸ்
“இங்கிலாந்து தொடரின் போது பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கிரிசைப் பயன்படுத்தி வைடாக இருந்து பந்து வீசும் படி என்னிடம் கூறி இருந்தார். மேலும் என்னுடைய வேகத்தை மாற்றி அமைக்கும் படியும் கேட்டிருந்தார். நான் நீண்ட காலமாக இந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். நான் என்னுடைய ரன் அப்பை சரி செய்து இருக்கிறேன். இதில் அவர் நிறைய உதவி இருக்கிறார். இந்த மாற்றங்களால் நான் நன்றாக பந்து வீச முடிந்தது”
இதையும் படிங்க : 7.5 ஓவர்.. சிஎஸ்கே பிரிவிஸின் தொடரும் காட்டடி.. இங்கிலாந்து பரிதாபம்.. தென் ஆப்பிரிக்கா வெற்றி
“நான் பந்து வீசுவேன் என என்னிடம் முன்கூட்டியே கம்பீர் மற்றும் சூர்யா இருவரும் கூறியிருந்தார்கள். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்கள். மேலும் பந்துவீச்சு பயிற்சியாளர் எனக்கு பல வகைகளில் உதவியாக இருந்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செயல்படுவதற்காக நான் நீண்ட காலமாக தயாராகி வந்தேன். நேற்று அதற்கான வெகுமதி கிடைத்தது” என கூறியிருக்கிறார்.






