இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது.
இப்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என வென்றது. இதைத்தொடர்ந்து நேற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி நடைபெற்றது.
மழையில் அதிரடி
இந்த நிலையில் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் 14 பந்தில் 28 ரன்கள், டோனவன் பெரேரா 11 பந்தில் 23 ரன்கள், டப்ஸ் 6 பந்தில் 13 ரன்கள் எடுத்தார்கள். இன்னொரு முனையில் உள்ளே வந்த டிவால்ட் பிரிவிஸ் வெறும் பத்து பந்துகள் மட்டும் சந்தித்து 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி 7.5 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்த பொழுது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு ஐந்து ஓவர்களில் 68 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இங்கிலாந்து பந்துவீச்சில் லுக் வுட் 2 விக்கெட் வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
இதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் 0, ஜோஸ் பட்லர் 11 பந்தில் 25 ரன் எடுத்தார்கள். தொடர்ந்து ஜேக்கப் பெத்தேல் 7, ஹாரி புரூக் 0, டாம் பாண்டன் 5, வில் ஜேக்ஸ் 1, சாம் கரன் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையும் படிங்க : 21 முறை டக் அவுட் ஆனாலும்.. 22வது முறை ஆடுவாய்.. இந்திய வீரருக்கு நம்பிக்கை கொடுத்த கம்பீர்.. அஸ்வின் ஓபன் டாக்
இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றது. மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ராபாடா மற்றும் யான்சன் என ஒரு நாள் தொடரில் விளையாடாத முக்கிய வீரர்கள் அனைவரும் டி20 தொடருக்கு திரும்பினார்கள். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக தென் ஆப்பிரிக்கா திட்டங்களுடன் விளையாடி வருகிறது.






