208 ரன் 15 ஓவர்.. இந்தியா வரலாற்று சாதனை வெற்றி.. இஷான் சூரியகுமார் ருத்ர தாண்டவம்.. நியூசிலாந்து பரிதாப தோல்வி

0
253
Ishan

இன்று நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி இஷான் கிஷான் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடி பேட்டிங்கில் விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிக்கும் இடையே தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது இதன் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

நியூசிலாந்து ரன் குவிப்பு

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே 9 பந்துகளில் 19 ரன்கள், டிம் ஷெய்ப்பர்ட் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த ரச்சின் ரவீந்தரா அதிரடியாக 26 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் வந்த கேப்டன் மிட்சல் சான்ட்னர் கடைசி கட்டத்தில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இவர் அதிரடியால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இஷான் கிஷான் – சூரியகுமார் மிரட்டல்

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாட வந்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் 6, அபிஷேக் ஷர்மா கோல்டன் டக் அடித்து வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் சூரியகுமார் யாதவ் இருவரும் பவர் பிளேவை பயன்படுத்தி அதிரடியாக ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : 198 ரன்.. பாபர் அசாம் வெளியே போன நேரம்.. ஸ்மித் கலக்கலில் பைனலுக்கு வந்த சிட்னி சிக்ஸர்ஸ் – சுவாரசிய சம்பவம்

இந்த ஜோடியில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 21 பந்தில் அரை சதம் அடித்து, தொடர்ந்து விளையாடி 32 பந்தில் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூரியகுமார் யாதவ் 23 பந்தில் 24 இன்னிங்ஸ் கழித்து அரை சதம் அடித்தார். இறுதியாக சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உடன் 82* ரன்கள், சிவம் துபே 18 பந்தில் 36* ரன்கள் எடுத்தார்கள். 15.2 ஓவரில் இந்திய அணி மூன்று விக்கெட் மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மேலும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணி சேஸ் செய்ததில் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகி இருக்கிறது.

- Advertisement -