விராட் ரோகித்துக்கு டி20 உலக கோப்பை கணக்கு எக்ஸாம் மாதிரி.. காரணம் இதுதான் – அஸ்வின் பேட்டி

0
115
Ashwin

இந்திய அணி நாளை டி20 உலக கோப்பையில் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த நிலையில் அனுபவ வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் பெற்றார்கள். அதுவரையில் 14 மாதங்களாக அணிக்கு வெளியில் இருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலைகளை மனதில் வைத்து இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு இவர்கள் இருவரையும் மீண்டும் உள்ளே கொண்டு வந்தது. தற்போது இவர்கள் இருவரையும் மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்த முடிவுக்கு குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” இவர்கள் இருவரும் சிபிஎஸ்இ கணித தேர்வுக்கு செல்வது போலானது. அங்கு என்ன சம் இருக்கிறது என்று தெரியாது. ஆனால் அவர்களுக்கு ஃபார்முலா என்ன என்பது தெரியும். அவர்களுக்கு அங்கு கண்டிஷன்கள் ஏற்ற வகையில் இல்லாவிட்டாலும் கூட அதற்கு தகுந்த பதில்களை கண்டுபிடிக்க முடியும்.

தற்போது வெஸ்ட் இண்டிஸ் கண்டிசன் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதில் விராட் கோலி மிக முக்கியமானவராக இருப்பார் என்று உணர்கிறேன். மேலும் ஐபிஎல் தொடரில் டி20 கிரிக்கெட் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க: நான் ஓபனா சொல்றேன்.. எங்க எல்லாருக்குமே இந்த ஒரு விஷயத்துல அழுத்தம் இருக்குது – ரிஷப் பண்ட் பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளுக்கு நீங்கள் உங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். நான் இங்கு ஏற்கனவே விளையாடி இருக்கிறேன் எனக்கு இங்குள்ள சூழ்நிலைகள் தெரியும், அதற்கு இதைத்தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் திறன் உங்களுக்கு இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.