கம்பேக் கொடுக்கிறதுக்கு அந்த ஒரே ஒரு விஷயம் போதும்.. இன்னைக்கு டபுள் போனஸ் கிடைச்சிருக்கு – ஷிவம் துபே பேட்டி

0
162
Dube

இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்திருக்கிறது. இன்று நடைபெற்ற 5வது போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்று கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு சிவம் துபே ஆட்டநாயகன் விருது பெற்று போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வெல்ல இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு இந்த முறை நல்ல துவக்கம் அமையவில்லை. ஜிம்பாப்வே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. சூழ்நிலையை உணர்ந்து விளையாடிய சஞ்சு சாம்சன் 45 பந்துகள் எடுத்து 58 ரன்கள் அடித்து இந்திய அணியை மீட்டார்.

- Advertisement -

இதற்குப் பிறகு இறுதிக் கட்டத்தில் சிவம் துபே 12 பந்துகளை மட்டும் சந்தித்து அதிரடியாக 26 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் முஸரபாணி 19 ரன்கள் தந்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு டியான் மேயர்ஸ் 32 பந்தில் 34 ரன்கள், மருமாணி மற்றும் பராஸ் அக்ரம் இருவரும் தலா 27 ரன்கள் எடுத்தார்கள். ஜிம்பாப்வே அணி 18.3 ஓவரில் 125 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் முகேஷ் குமார் 4, சிவம் துபே 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட சிவம் துபே ஆட்டநாயகன் விருது பெற்று பேசிய பொழுது “ஒரு ஆல் ரவுண்டராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்படுவது எப்பொழுதும் சிறப்பான ஒன்று. டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் தடுமாறுகிறிர்கள் என்றால் ஒரே ஒரு ஷாட் போதும் நீங்கள் மீண்டும் திரும்பி வந்துவிடலாம். இங்கு கண்டிஷன் மிகவும் நன்றாக இருந்தது நாங்கள் மிகவும் அனுபவித்து விளையாடினோம். இங்கு பெரிய பவுண்டரி எல்லைகள் இருக்கிறது. மக்களும் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 4-1.. சாம்சன் முகேஷ் குமார் பேட்டிங் பவுலிங்கில் கலக்கல்.. சொல்லி அடித்த இந்திய இளம்படை.. ஜிம்பாப்வே தொடர் தோல்வி

அடுத்து இந்திய அணி வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்கு இலங்கை செல்கிறது. இந்தத் தொடர் இந்த மாத இறுதியில் 27ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இதற்கான இந்திய அணியில் சிவம் துபே தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது!

- Advertisement -