4-1.. சாம்சன் முகேஷ் குமார் பேட்டிங் பவுலிங்கில் கலக்கல்.. சொல்லி அடித்த இந்திய இளம்படை.. ஜிம்பாப்வே தொடர் தோல்வி

0
252
ICT

இன்று இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முகேஷ் குமாரின் அபார பந்துவீச்சில் எளிதான வெற்றி பெற்று தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் ஐந்து பந்தில் 12 ரன், கேப்டன் சுப்மன் கில் 14 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த அபிஷேக் ஷர்மா 11 பந்தில் 14 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஜோடி சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார்கள். ரியான் பராக் 24 பந்தில் 22 ரன்கள், சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 58 ரன் எடுத்தார்கள். இதைத் தொடர்ந்து சிவம் துபே 12 பந்தில் 26 ரன், ரிங்கு சிங் 9 பந்தில் 11* ரன் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. முஸரபாணி இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு வழக்கம் போல் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஆரம்பித்தார்கள். ஜிம்பாப்வே நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் சிக்கந்தர் ராஸா 12 பந்தில் 8 ரன்கள் எடுத்து பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அந்த இடத்திலேயே அந்த அணிக்கு இருந்த கடைசி வெற்றி வாய்ப்பும் தவறியது.

- Advertisement -

ஜிம்பாவே அணிக்கு பேட்டிங் வரிசையில் டியான் மேயர்ஸ் மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடினார். அவர் 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து பராஸ் அக்ரம் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணி இறுதியாக 18. 3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க : 5வது டி20.. தோனியை விட 56 போட்டிகள் வித்தியாசம்.. சஞ்சு சாம்சன் 2 புதிய ரெக்கார்டு.. முதல் வீரராக சாதனை

இறுதியாக இந்திய அணி கடைசி போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முதல் போட்டியை தோற்ற இந்திய அணி அடுத்த நான்கு போட்டிகளையும் வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என சுப்மன் கில் தலைமையில் கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -