ரிஷப் பண்ட் தோனிக்கு செஞ்ச பிளானை.. தோனி என்னை வச்சு அதை தடுத்தார்.. ரொம்ப ஸ்மார்ட்டான ஆள் – சிவம் துபே

0
1081

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எம்எஸ் தோனி மற்றும் சிவம் துபே ஆகியோர் இறுதி வரை நின்று சிறப்பாக விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி தன்னிடம் கூறிய வார்த்தைகள் குறித்து சிவம் தூபே சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே சிறப்பான வெற்றி

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 63 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. தொடக்கம் சிஎஸ்கே அணிக்கு ஓரளவு நன்றாக இருந்தாலும் அதற்குப் பிறகு மிடில் வரிசை வீரர்கள் அனைவரும் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

எனவே அதற்குப் பிறகு சிவம் டுபே மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோர் சிஎஸ்கே அணியை இறுதிவரை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரவி பிஸ்னாய் 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இருப்பினும் கடைசி ஓவரில் எம்எஸ் தோனி விளையாடிக் கொண்டிருந்தபோது ரிஷப் பண்ட் பிஸ்னாய்க்கு இறுதி ஓவரை வழங்கவில்லை.

- Advertisement -

எம்எஸ் தோனியின் மாஸ்டர் மைண்ட்

கடைசி கட்ட ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே ரிஷப் பண்ட் பயன்படுத்த அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட தோனி அதிரடியாக விளையாடி வெற்றியை சென்னை அணியின் பக்கம் திருப்பினார். இந்த சூழ்நிலையில் இறுதிக்கட்டத்தில் எம்.எஸ். தோனி தன்னிடம் கூறியதாக சில முக்கிய விஷயங்களை சிவம் துபே பேசியிருக்கிறார். அதாவது சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதால் நான் கடைசிவரை விளையாட வேண்டும் என்ற தோனி தன்னிடம் கூறியதாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:நான் சொல்ற இதை.. பெரிய கேப்டன்களே நம்ப மாட்டாங்க.. ஆனா இதுல ஸ்ரேயாஸ் ஐயர் வேற ரகம் – அம்பாதி ராயுடு

இதுகுறித்து சிவம் தூபே கூறும் போது “என்னை விட நீங்கள் ஸ்பின்னரை சிறப்பாக எதிர்கொண்டு விளையாட கூடியவர் என்பதால், நீங்கள் கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும். ரவி பிஸ்னாய்க்கு ஒரு ஓவர் இருக்கிறது. எனவே நீ கடைசி வரை விளையாடினால் பிஸ்னாய் கடைசி வரை ஓவர் வீச வர மாட்டார் என்று தோனி கூறினார். எனவே இதனை தனக்கு உடனே சாதகமாக தோனி பயன்படுத்திக் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்களை அதிரடியாக எதிர் கொண்டு விளையாடினார். எனவே அதனை பயன்படுத்தி நான் கடைசி வரை அவரோடு விளையாடினேன்” என்று தூபே கூறி இருக்கிறார்.

- Advertisement -