நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு ஸ்ரேயாஸ் அய்யர் குறித்து சில முக்கிய கருத்துக்கள் கூறியிருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த கேப்டன்
இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியின் சிறந்த பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைக் கொல்கத்தா அணி அதிக பந்துகளை மீதம் வைத்து எளிதாக வெற்றி பெற்று விடும் என்றே அனைவரும் நம்பினார்கள். ஏனென்றால் கொல்கத்தா அணி கடந்த ஆட்டங்களில் தங்களது சிறந்த திறமையை நிரூபித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் பேட்டிங் தொடங்கிய கொல்கத்தா அணிக்கு மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நம்பிக்கை தந்த போதிலும் அதற்குப் பிறகு பஞ்சாப் அணியின் அபரிமிதமான எழுச்சியால் கொல்கத்தா அணி பஞ்சு பஞ்சாகி போனது. வெற்றி இலக்கை விட 16 ரன்களுக்கு குறைவாக ஆல் அவுட் ஆகியது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் அம்பாதிராய்டு ஸ்ரேயாஸ் அய்யர் குறித்த சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நம்புங்கள் நான் சொல்வது உண்மை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயமாக ஒரு சிறந்த கேப்டனாக இருந்துள்ளார். பஞ்சாப் வீரர்கள் ஒரு விக்கெட், இரண்டு மற்றும் மூன்று என விக்கட் என வரிசையாக எடுத்தவுடன் நம்பிக்கை பெற்றார்கள். அதற்குப் பிறகு அதிக ஆற்றல் கிடைத்தது. அன்றைய இரவு ஒரு கேப்டன்சியை விட ஒருங்கிணைந்த செயல்பாடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு வழி வகுத்தது. பஞ்சாப் அணி நிர்ணயித்த 216 ரன்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத கேப்டன்களை நான் அறிவேன். என்னை நம்புங்கள் நிச்சயமாக இது உண்மைதான்.
இதையும் படிங்க:சிட்னி டெஸ்டில் கம்பீர், அகர்கர் உடன் எனக்கு சண்டை வந்தது உண்மைதான்.. ஒரு முடிவோடுதான் விலகினேன் – ரோகித் ஓபன் டாக்
மேலும் ஸ்ரேயாஸ் அய்யரோடு கோச் ரிக்கி பாண்டிங் அவருடன் இருக்கிறார். அவர் ஒருபோதும் போராட்ட குணத்தை கைவிட மாட்டார். ஆனால் அவர்கள் வீரர்களை அடிக்கடி தொடர்ந்து மாற்றக் கூடாது. ஒரே மாதிரியான வீரர்களை விளையாடினால் பஞ்சாப் அணி நிச்சயம் அதிக வெற்றிகளை பெறும்” என்று அம்பாதிராய்டு பேசியிருக்கிறார். பஞ்சாப் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது குறைபடத்தக்கது.