நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சிவம் டுபே 35 பந்தில் 31 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும் பேட்டிங்கில் அவருக்கு உண்டாக்கி இருக்கும் தடுமாற்றம் குறித்தும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணியில் சிவம் துபேவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை தாக்கி சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய திறமை அவருக்கு இருக்கின்ற காரணத்தினால் இந்த வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் நியூயார்க் மைதானத்தில் சிவம் துபே பெரிய அளவில் தடுமாறி வந்தார். நேற்று அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டம் இழக்காமல் 35 பந்தில் 31 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் இருந்து கொஞ்சம் வெளியே வந்திருக்கிறார். மேலும் அவர் நேற்றைய போட்டியில் ஒரு சிக்ஸரும் அடித்திருந்தார்.
மேலும் நேற்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் சிவம் துபேவுக்கு பந்து வீசும் வாய்ப்பையும் ரோஹித் சர்மா கொடுத்திருந்தார். ஆனாலும் தொடர்ந்து ரோகித் சர்மா அவருக்கு பந்துவீச்சில் வாய்ப்பை நீட்டிக்கவில்லை.
இதுகுறித்து பேசி இருக்கும் சிவம் துபே கூறும்பொழுது “உண்மையில் நான் ரஞ்சி கோப்பை விளையாடுவதைப் போலத்தான் உணர்ந்தேன். வெள்ளைப்பந்து போட்டி போலவே தெரியவில்லை. இந்த ஆடுகளத்தில் உள்ளே வந்து முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடுவது முடியாத காரியம். நீங்கள் இங்கு நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். உண்மையில் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்கு சிக்ஸர்கள் அடிக்க முடியாமல் இருக்கிறேன்.இங்கு வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்வது கூட கடினமானது. மேலும் பந்து வீசுவது நல்லது. ஆனாலும் என் ஓவரில் சிக்ஸர் சென்றதால் தொடர்ந்து எனக்கு ரோகித் சர்மா பந்துவீச வாய்ப்பு தரவில்லை.
இதையும் படிங்க : இனி அந்த விஷயத்துக்கு நான்தான் பும்ரா கிடையாது.. ரோகித்கிட்ட சொல்லிட்டேன் – அர்ஸ்தீப் சிங் பேட்டி
அணியில் இருக்கும் பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் அனைவரும் என்னிடம் உங்களுக்கு சிக்ஸர்கள் அடிக்கும் திறமை இருக்கிறது எனவே தொடர்ந்து நம்பிக்கையோடு விளையாடுங்கள் என்று கூறினார்கள். மேலும் கடந்த காலத்தில் நான் செய்திருக்கும் விஷயங்கள் குறித்து நான் எந்த சந்தேகமும் படவில்லை. நான் சிஎஸ்கே வில் செய்த ரோலை செய்வதற்கான சூழ்நிலை இங்கு இல்லை. எனவே நான் வித்தியாசமான முறையில் பேட்டிங் செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.