இனி அந்த விஷயத்துக்கு நான்தான் பும்ரா கிடையாது.. ரோகித்கிட்ட சொல்லிட்டேன் – அர்ஸ்தீப் சிங் பேட்டி

0
907
Arsdeep

நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் சிறப்பான முறையில் செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் முக்கியமாக கேட்டு வாங்கி இருக்கும் ஒரு பொறுப்பை பற்றி அவர் பேசியிருக்கிறார்.

அர்ஸ்தீப் சிங் நேற்று அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசி வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டுத் தந்தார். மேலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு இந்தியரின் சிறந்த பந்துவீச்சு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த தொடரில் முதலில் அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளும், அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். இந்திய அணியின் தரப்பில் அதிக விக்கெட் கைப்பற்றியவராக 7 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார்.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பத்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து 13 பந்தில் முக்கியமான ஒன்பது ரன்கள் எடுத்து முகமது சிராஜால் ரன் அவுட் செய்யப்பட்டார். மேலும் அந்தப் போட்டியில் பேட்டிங்கில் முகமது அமீர் பந்துவீச்சில் சிறப்பான பவுண்டரி ஒன்றையும் அடித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் அர்ஸ்தீப் சிங் கூறும் பொழுது “பேட்டிங் வரிசையில் ஒன்பதாவதாக எனக்கு முன்பாக பும்ரா பாய் செல்ல வேண்டும். ஆனால் நான் அவருக்கு முன்பாக செல்வதாக ரோகித் பாயிடம் சொல்லிவிட்டு முன்னே சென்றேன். அதற்கு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். நான் அவர்களிடம் நீங்கள் என்ன சொன்னாலும் நான் தான் செல்வேன் என்று சொல்லிவிட்டேன். பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான வேகம் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடியது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. கிரிக்கெட்டின் மூன்று துறையிலுமே நாம் முடிந்த அளவு சிறப்பாக நம்மை வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : என்னை வழிநடத்துவது இந்திய வீரர் கிடையாது.. ரொம்ப வருஷமா அந்த ஆஸ்திரேலிய வீரர்தான் – ரிஷப் பண்ட் பேச்சு

நேற்று பந்துவீச்சில் திட்டம் எளிமையானதாக இருந்தது. விக்கெட் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்ததால் பந்தை பிட்ச் செய்து பேச வேண்டும். எளிதான பந்துகளை தரக்கூடாது என்று முடிவு செய்தோம். ஏனென்றால் எங்களது பேட்ஸ்மேன்களாலும் ரன்கள் எடுப்பது சிரமமாக இருந்தது. ஹார்ட் லென்த்தில் பந்தை அடிக்க திட்டமிட்டோம். இது போன்ற சூழ்நிலையில் விக்கெட்டை பயன்படுத்துவது நல்லது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -