தோனி பாய் பத்தி கனவு இருந்தது.. அது உடைஞ்சப்ப மோசமா உணர்ந்தேன்.. நான் இப்படித்தான் – ஷிவம் துபே பேட்டி

0
37
Dhoni

இந்திய அணி வீரர் சிவம் துபே சர்வதேச கிரிக்கெட்டில் 2019 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகிவிட்டார். ஆனால் அவருக்கு தற்பொழுது தான் இந்திய அணியில் ஒரு நம்பிக்கையான இடம் கிடைத்திருக்கிறது. இதற்கு முக்கியமான காரணமாக சிஎஸ்கே அணியும் மகேந்திர சிங் தோனியும் இருக்கிறார்கள். இது குறித்து சிவம் துபே நிறைய புதிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமான தொடரில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதன் காரணமாக அவரை அடுத்தடுத்த தொடர்களுக்கு தேர்வு செய்யவும் இல்லை. முதல் தொடருக்குப் பிறகு கழட்டி விடப்பட்டார். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றி கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

- Advertisement -

மேலும் அவரை ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி வாங்கியது. அந்த நேரத்தில் ஆர்சிபி அணி மிக மோசமாக செயல்பட்டது. எனவே அவருக்கு ஐபிஎல் தொடரும் சிறந்த முறையில் ஆரம்பிக்கவில்லை. இதன் காரணமாக அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை துவங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வருவது போல இருந்தது.

இந்த நிலையில் தான் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் சிவம் துபேவை சிஎஸ்கே அணி வாங்கியது. சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் தோனி சில முக்கிய மாற்றங்களை அவருடைய பேட்டிங்கில் ஏற்படுத்தினார்கள். அந்தச் சிறிய மாற்றங்கள்தான் இன்று இந்திய டி20 கிரிக்கெட்டில் சிவம் துபேவை ஒரு முக்கிய வீரராகவும் மாற்றி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் சிவம் துபே கூறும்பொழுது “எனக்கு எப்பொழுதும் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் எம்எஸ்.தோனி உடன் இணைந்து விளையாட வேண்டும் என்கின்ற கனவு இருந்து வந்தது. நான்இந்திய அணிக்காக அறிமுகமான பொழுது தோனி ஓய்வு பெற்றுவிட்டார். அதை நான் மோசமாக உணர்ந்தேன்.

ஐபிஎல் தொடரின் அறிமுகத்திலும் நான் அவருடன் இணைய முடியவில்லை. பிறகு சிஎஸ்கே அணிக்கு வந்தேன். இது எனக்கு ஒரு பெரிய சந்தர்ப்பமாக அமைந்தது.இப்போது அவருடன் என்னால் நிறைய பேச முடியும். ஆனால் ஆரம்பத்தில் அவருடன் நான் பேசும் பொழுது நிறைய பதட்டமாக இருப்பேன்.

இதையும் படிங்க: WTC புள்ளி பட்டியல்.. இங்கிலாந்து வெற்றியால் ஏற்பட்ட மாற்றங்கள்.. 3 இடங்கள் முன்னேற்றம்

அவர் ஒரு பெரிய வீரர். அவர் ஒரு வீரரை பற்றி புகழ்ந்தால் அது அந்த வீரருக்கு பெரிய விஷயமாக தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக அமையும். இப்படித்தான் எனக்கும் நடந்தது. அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். தோனி பல விஷயங்களில் உதவியிருக்கிறார். அவரிடமிருந்து நிறைய சிறந்த ஆலோசனைகளை பெற்று இருக்கிறேன். நான் எவ்வளவு நெருக்கமாக அவருடன் இருந்தாலும் கூட, நான் அவருடைய ரசிகனாகவே தொடர்வேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -