WTC புள்ளி பட்டியல்.. இங்கிலாந்து வெற்றியால் ஏற்பட்ட மாற்றங்கள்.. 3 இடங்கள் முன்னேற்றம்

0
40
WTC

நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை 241 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமாக இங்கிலாந்து அணி வென்றது. மேலும் 2-0 என டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றிக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்டே டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இரண்டாவது போட்டியையும் 241 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

- Advertisement -

இங்கிலாந்து அணி சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போல அதிரடியாக விளையாடி வருகிறது. இதனால் அவர்களுக்கு உலகெங்கும் தனி ரசிகர்கள் கூட்டம் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடுகின்ற காரணத்தினால் வெற்றி பெறுவதில்லை. இதனால் அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கடந்த மூன்று முறையாகவும் தகுதி பெறவில்லை.

எனவே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் இரண்டு போட்டிகளை தொடர்ந்து வென்ற காரணத்தினால் தற்பொழுது மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆறாவது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் தற்பொழுது இங்கிலாந்து இருந்த கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளை வென்று, 6 போட்டிகளில் தோற்று 1 போட்டியை டிரா செய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : LPL 2024.. 93 பந்து 185 ரன்.. ரூசோவ் அதிரடி சதம்.. 4வது முறையாக ஜாப்னா கிங்ஸ் சாம்பியன்

அதே சமயத்தில் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. தற்போது 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இந்த மூன்று அணிகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு மோதிக் கொண்டிருக்கின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :

இந்தியா – 68.51
ஆஸ்திரேலியா – 62.50
நியூசிலாந்து – 50.00
இலங்கை – 50.00
பாகிஸ்தான் – 36.66
இங்கிலாந்து – 31.25
சவுத் ஆப்பிரிக்கா – 25.00
பங்களாதேஷ் – 25.00
வெஸ்ட் இண்டீஸ் – 22.22

- Advertisement -