நான் விராட் கோலி பேட்டிங் பத்தி பேசறதா?.. என்ன விளையாடறிங்களா – ஷிவம் துபே தரமான பதில்

0
237
Virat

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்த சுற்று முன்னேறி இருக்கிறது. நாளை முதல் சுற்றில் கடைசி போட்டியில் ப்ளோரிடா மைதானத்தில் கனடா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில் ஷிவம் துபே பத்திரிக்கையாளர் சந்திப்பில் சில முக்கியமான விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார்.

இந்திய அணி முதல் சுற்றில் மூன்று ஆட்டங்களை நியூயார்க் மைதானத்தில் விளையாடியது. பேட்ஸ்மேன்களுக்கு அந்த குறிப்பிட்ட மைதானம் கண்கள் எடுப்பதற்கு பெரிய கடினமான ஆடுகளத்தை கொண்டிருந்தது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் அங்கிருந்து எப்படியாவது அடுத்த மைதானத்திற்கு செல்லவே விரும்பினார்கள்.

- Advertisement -

ஷிவம் துபேவை இந்திய அணியில் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை தாக்கி விளையாடுவதற்காக தேர்வு செய்திருந்தார்கள். ஆனால் அவரால் முதல் இரண்டு போட்டிகளில் எந்த வித தாக்கத்தையும் அந்த ஆடுகளத்தில் ஏற்படுத்த முடியவில்லை. சொற்ப ரன்னில் வெளியேறினார்.

இவரைப் போலவே துவக்க ஆட்டக்காரராக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு வரும் விராட் கோலியின் தடுமாறிக் கொண்டிருக்கிறார். அவர் மொத்தம் மூன்று ஆட்டங்களில் சேர்த்து ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தன்னுடைய பேட்டிங் அணுகுமுறை நியூயார்க் மைதானத்தில் ஒத்துவரவில்லை என்றும் அதனால் மாற்றிக் கொண்டதாகவும் ஷிவம் துபே பேசியிருந்தார். மேலும் அவரிடம் விராட் கோலியின் பேட்டிங் தடுமாற்றம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க : சேவாக்குக்கு மரியாதைனா என்னனே தெரியாது.. சச்சின் டிராவிட்ட பார்த்து கத்துக்கணும் – பங்களாதேஷ் வீரர் விமர்சனம்

இதுகுறித்து பதில் அளித்து பேசிய ஷிவம் துபே “விராட் கோலியின் பேட்டிங் பற்றி பேசுவதற்கு நான் யார்? அவர் மூன்று போட்டிகளில் ரன்கள் எடுக்கவில்லை என்றால் அடுத்த மூன்று போட்டிகளில் சதங்கள் எடுப்பார். மேலும் அதில் விவாதங்கள் எதுவும் இருக்காது.அவரது ஆட்டம் எப்படி ஆனது அவர் எப்படி விளையாடுவார் என்று எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -