இலங்கை முதல் ODI: மீண்டும் ஆச்சரியப்படுத்திய கம்பீர்.. என் கவனம் இதில்தான் ரோகித் திட்டவட்டம்.. எதிர்பாரா மாற்றங்கள்

0
406
Rohit

இன்று இலங்கை கொழும்பு மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடுகிறது. இந்த போட்டியில் கம்பீர் தலைமையிலான இந்திய அணி நிர்வாக குழு வித்தியாசமான முறையில் பிளேயிங் லெவனை அமைத்திருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். இலங்கை அணியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் காயத்தால் வெளியேறி இருக்கும் நிலையில் முகமது சிராஸ் அறிமுகம் ஆகிறார்.

- Advertisement -

இந்திய அணி நிர்வாகம் இந்த போட்டிக்கு வித்தியாசமான அணியை தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை எடுத்து இருக்கிறது. அதே சமயத்தில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களாக சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங் இருக்கிறார்கள்.

இதில் ஆச்சரியப்படும் விதமாக மூன்றாவது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தை மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபேவுக்கு கொடுத்திருக்கிறார்கள். வாஷிங்டன் சுந்தர் இடத்தில் ரியான் பராக் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

வழக்கம்போல் இந்திய அணியின் முதல் ஐந்து இடங்களில் கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் இடம் பெறுகிறார்கள். இத்தோடு இரண்டு சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் மற்றும் ஒரு மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் என பேட்டி யூனிட்டில் எட்டு வரை நீட்டிப்பு செய்திருக்கிறார்கள்.

இந்த போட்டியில் டாஸ் நிகழ்வுக்கு பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” இது நல்ல ஆடுகளம். இங்கு நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடியிருப்பதால், எங்களுக்கு இங்குள்ள கண்டிஷன் குறித்து நன்றாக தெரியும்.நான் உள்பட விராட் கோலி,கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் திரும்பி வந்திருக்கிறோம். இந்த அணியில் சிவம் துபே விளையாடுகிறார்.

இதையும் படிங்க : 53 வருட ODI வரலாறு.. இந்தியா படைக்க இருக்கும் பிரம்மாண்ட சாதனை.. இன்று இலங்கை அணிக்கு எதிராக வருமா?

எங்களிடம் ஒரு சிறந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இருந்தது ஆனால் எங்களால் அதில் கோட்டை தாண்ட முடியவில்லை. ஆனால் அதில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருந்தது. வீரர்கள் அணியில் வந்து சுதந்திரமாக விளையாடும் சூழலை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். நான் என்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்துவேன். எங்களிடம் போதுமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள், அவர்களால் இதை சமாளிக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -