இலங்கை சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் இன்று ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக விளையாட உள்ள முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மாபெரும் உலக சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. தொடரில் இந்திய அணியை வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் இலங்கை அணி மோசமாக விளையாடி மூன்று போட்டிகளையும் தோற்றது.
தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு பல்லேகலே மைதானத்தில் இருந்து கொழும்பு மைதானத்திற்கு இடம் மாறி இந்திய அணி முகாம் இட்டிருக்கிறது. மேலும் இன்றைய போட்டியில் 70 சதவீதம் மழை குறிப்பிடலாம் என்றும் வானிலை அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் இந்திய அணிகள் நட்சத்திர வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக மூத்த நட்சத்திர வீரர்களுடன் இணைந்து முதல் முறையாக பணியாற்ற இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி வென்றால் ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக நூறாவது வெற்றியாக இது பதிவாகும். 53 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் எந்த ஒரு அணியும் இன்னொரு அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 100 வெற்றிகளை பதிவு செய்தது கிடையாது. இந்திய அணி இதைச் செய்யும் பொழுது முதல் அணியாக கிரிக்கெட் வரலாற்றில் தனிச் சாதனையை படைக்கும்.
இதையும் படிங்க :
ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற ஐந்து அணிகள் :
இந்தியா – இலங்கை – 99 வெற்றிகள்
ஆஸ்திரேலியா – நியூசிலாந்து – 96 வெற்றிகள்
பாகிஸ்தான் – இலங்கை -93 வெற்றிகள்
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து – 88 வெற்றிகள்
ஆஸ்திரேலியா – இந்தியா – 84 வெற்றிகள்