சிறந்த கேப்டன் தோனியா ரோகித்தா?.. ஷிவம் துபே தெறி பதில்.. ரோகித் சர்மா ஆச்சரியம் – சுவாரசிய நிகழ்வு

0
1147
Dhoni

இந்திய வீரர்கள் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது ஷிவம் துபேவிடம் சிறந்த கேப்டன் தோனியா? ரோகித் சர்மாவா? என்று கேட்கப்பட்டதற்கு அவர் சுவாரசியமான பதிலை கூறி அசத்தியிருக்கிறார்.

மிகவும் பிரபல தனியார் நிகழ்ச்சி ஆன கரன் சர்மா தொகுத்து வழங்கும் பேட்டி நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் சிவம் துபே, அக்சர் படேல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் தான் ஷிவம் துபேவிடம் இப்படி ஆன கேள்வி கேட்கப்பட்டது.

- Advertisement -

ஷிவம் துபே கிரிக்கெட் வாழ்க்கை மாறிய புள்ளி

ஷிவம் துபே விராட் கோலி தலைமையில் அறிமுகமாகி இருந்தாலும் கூட, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிய கேப்டனாக ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியை இருந்தார். பலமாகப் பந்தை அடிக்க முடிந்த அவர் சிறிது நேரம் களத்தில் இருந்தால் ரன்கள் சுலபமாக வரும் என்பதை தோனியே உணர வைத்தார்.

மேலும் ஷிவம் துபே ஷார்ட் பந்துகள் விளையாடுவதில் தடுமாறி வந்தார். அந்த பந்துகளில் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்து சிஎஸ்கே அணியில் தோனி அவருக்கு மிகச் சிறந்த ஆலோசனைகளை வழங்கி இருந்தார். இதன் காரணமாக ஷிவம் துபே விக்கெட்டுகளை இழக்கும் வாய்ப்பு குறைந்தது. இதன் காரணமாக களத்தில் அவர் நீண்ட நேரம் இருந்து பெரிய ரன்கள் எடுத்தார். இது இந்திய அணியிலும் வாய்ப்பைக் கொண்டு வந்தது.

- Advertisement -

தோனியா? ரோகித் சர்மாவா?

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா ஷிவம் துபேவுக்கு நல்ல ஆதரவாக இருந்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் சரிவர விளையாடாத போதிலும் கூட தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். கடைசியில் இறுதிப் போட்டியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஷிவம் துபே வழங்கினார்.

இதையும் படிங்க : அடுத்த கூக்ளி.. மும்பை இந்தியஸின் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவா? – அவரே வெளியிட்ட பதில்

இந்த நிலையில் சிறந்த கேப்டன் தோனியா ரோகித் சர்மாவா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷிவம் துபே “நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் பொழுது தோனி பாய் சிறந்த கேப்டன். நான் இந்திய அணிக்காக விளையாடும் பொழுது ரோகித் பாய் சிறந்த கேப்டன்” என்று சாமர்த்தியமாக பதில் சொல்லி தப்பினார். இதை நிகழ்ச்சியில் உடன் இருந்து கேட்ட ரோகித் சர்மா அருமை என்பது போல சிக்னல் செய்தார்!

- Advertisement -