துபேக்கு பதில் ஹர்சித் ராணா.. இங்கிலாந்து பீட்டர்சன் எதிர்ப்பு.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது.?

0
267

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்று தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் சிவம் துபேவுக்கு கன்கஷன் ஏற்பட்டதாக கூறி அவர் பந்து வீசும் போது களத்திற்கு வரவில்லை.

இதற்கு பதிலாக ஹர்ஷித் ரானா களத்திற்கு வந்து பந்து வீசினார். இதில் ஹர்ஷித் ரானா 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சிவம் துபேக்கு பதில் ஹர்ஷித் ரானா பந்து வீச வந்தது ஐசிசி விதிப்படி சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஐசிசி விதி சொல்வது என்ன?

ஐசிசி விதிப்படி ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அந்த வீரர் போலவே திறன் உடைய மாற்று வீரரை தான் அணிக்குள் கொண்டு வர வேண்டும். உதாரணத்திற்கு ஒரு சுழற்பந்துவீச்சாளர்  காயமடைந்தால் மற்றொரு சுழற் பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வர வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் காயமடைந்தால் மற்றொரு பேட்ஸ்மேனையும், ஒரு ஆல் ரவுண்டர் காயமடைந்தால் மற்றொரு ஆல்ரவுண்டரையும் அணிக்குள் கொண்டு வர வேண்டும்.

இந்த சூழலில் சிவம் துபேவுக்கு காயம் அடைந்தால் ரமந்தீப் சிங் தான் அணிக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால் வேகப்பந்துவீச்சாளர் ஆன ஹர்ஷித் ரானா கொண்டு வரப்பட்டார். இது குறித்து கடும் குற்றச்சாட்டு வைத்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன்,” ஜாஸ் பட்லர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்”.

- Advertisement -

பீட்டர்சன் கடும் அதிருப்தி:

“மாற்று வீரர் தொடர்பான இந்தியாவின் தேர்வு நிச்சயம் பட்லருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்காது. உலகில் யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். சிவம் துபேவுக்கு ஹர்ஷித்ரானா தான் சரியான மாற்று வீரரா? எனக்குத் தெரிந்து யாரும் இதற்கு ஆம் என்று சொல்ல மாட்டார்கள்”.

“இது நிச்சயம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தும். ஹர்சித் ரானாவை கொண்டு வந்து இந்திய அணி அதை தங்களுடைய பலமாக மாற்றி இருக்கிறது” என்று கூறியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே இந்தியா இது போல் ஒரு கன்கஷன் மாற்றுவீரரை தேர்வு செய்து இருக்கிறது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் ஜடேஜாவுக்கு கன்கஷன் ஏற்பட்டதாக கூறி சாகலை அணிக்குள் இந்தியா கொண்டு வந்தது. அதில் சாகல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

- Advertisement -