0 ஃபோர்ஸ்.. 91 ரன்.. டி20 வரலாற்றில் யாருமே செய்யாத சாதனையை செய்த ஹெட்மயர்.. சிபிஎல் 2024

0
1015

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் தொடரான கரீபியன் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அமேசான் வாரியர்ஸ் மற்றும் எஸ்கே கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அமேசான் வாரியர்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

இதில் குறிப்பிடத்த அம்சமாக அமேசான் வாரியர்ஸ் அணி வீரரான சிம்ரன் ஹெட்மயர் 39 பந்துகளில் 91 ரன்கள் குவித்ததன் மூலம் ஒரு சிறப்பான சாதனையை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்று வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலம். அதில் நேற்று நடைபெற்ற ஏழாவது போட்டியில் அமேசான் வாரியர்ஸ் மற்றும் எஸ்கே கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த அமேசான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. இதில் அமேசான் அணியில் அதிகபட்சமாக ஹெட்மயர் 39 பந்துகளில் 11 சிக்ஸர்களுடன் 91 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரரான குர்பாஸ் 69 ரன்களும், கே பால் 14 பந்துகளில் 38 ரன்கள் குவித்தனர். இதற்குப் பிறகு இலக்கை நோக்கி விளையாடிய பேட்ரியோட்ஸ் அணி 18 ஓவர்களில் 226 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதில் அமேசான் அணியில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட மோட்டி நான்கு ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதில் ஆட்டத்தின் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக அமேசான் அணியின் ஹெட்மயர் ஒரு சிறப்பான சாதனையை பதிவு செய்திருக்கிறார். 39 பந்துகளில் 91 ரன்களை 11 சிக்சர்கள் மூலம் குவித்தார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 10 சிக்ஸர்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு ரிக்கி வெஷல்ஸ் நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக டி20 பிளாஸ்ட் தொடரின் போது 9 சிக்ஸர்களை அடித்தது இதுவரை அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது நேற்றைய போட்டியின் மூலமாக ஹெட்மயர் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார். மேலும் நேற்றைய போட்டியின் போது மொத்தமாக 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது.

இதையும் படிங்க:நானே சொல்றேன்.. ஆஸ்திரேலியாவுல இந்தியாவை வீழ்த்துவது கடினம்.. காரணம் இதுதான் – மார்னஸ் லபுஷேன் பேட்டி

டி20 கிரிக்கெட்டில் பவுண்டரி இல்லாமல் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்

11 – ஷிம்ரோன் ஹெட்மியர் (GAW vs SKN) போது 91 ஆஃப் 39, பாசெட்டரே 2024

9 – ரிக்கி வெசல்ஸ் (நாட்ஸ் வெர்சஸ் வோர்க்ஸ்) 55 ஆஃப் 18, வொர்செஸ்டர் 2018

8 – வில் ஜாக்ஸ் (சர்ரே vs கென்ட்) 64 ஆஃப் 27, கேன்டர்பரி 2019

- Advertisement -