நானே சொல்றேன்.. ஆஸ்திரேலியாவுல இந்திய அணியை வீழ்த்துவது கடினம்.. காரணம் இதுதான் – மார்னஸ் லபுஷேன் பேட்டி

0
2930

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள முக்கிய தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி மூன்றாவது முறையாக இந்த தொடரை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுஷேன் கூறியிருக்கிறார்

- Advertisement -

இதற்கு முன்னர் நடைபெற்ற போது விராட் கோலி தலைமையில் ஒரு முறையும், ரகானே தலைமையில் ஒரு முறையும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.அதற்குப் பின்னர் இந்தியாவில் நடைபெற்ற தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. எனவே நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் திரும்பவும் இந்த தொடர் நடைபெற உள்ளதால் இந்த போட்டிகள் மீது ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வேறு எந்த தொடர்களிலும் கலந்து கொள்ளாமல், இந்தத் தொடர் மீது மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தும் விதமாக தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி வீரரான மார்னஸ் லபுஷேன் இந்திய ஆணியின் பந்துவீச்சு ஆஸ்திரேலியா நிலைமைகளில் வலுவாக இருப்பதாகவும், அதனால் இந்திய அணியை வீழ்த்துவது கடினமான காரியம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி மிகவும் சிறப்பான நிலையில் இருக்கிறது. இது உண்மையாக ஆஸ்திரேலியா நிலைமைகளுக்கு அவர்களை கொண்டு வந்து ஆஸ்திரேலியா சூழ்நிலைகளில் அவர்களை வீழ்த்துவதற்கு கடினமான அணியாக மாற்றுகிறது. எனவே இந்த கோடை காலத்தில் அட்டவணையை திருப்பி அமைக்கும் விதமாக இந்திய அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்க எங்களால் முடியும் என்று நம்புகிறோம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுமே விளையாட்டை அதிக அளவில் விருப்பக் கூடிய அணியாகும். மேலும் இந்திய அணி தங்கள் விளையாட்டில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் விளையாடும் போது ஆற்றல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் இங்கிலாந்து, இந்தியா அல்லது ஆஸ்திரேலியா என எங்கு விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. எங்கு விளையாடினாலும் இது கடினமான போட்டித் தொடராக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:பும்ரா கூட கிடையாது.. நிஜமா எனக்கு பிடிச்ச 2 பாஸ்ட் பவுலர் இவங்கதான் – முகமது ஷமி விருப்பம்

இந்திய அணியின் வலிமையான பந்து வீச்சாளர் ஆன பும்ரா இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். முகமது சமி எட்டு போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளும், சிராஜ் இதுவரை 13 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -