திடீரென ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விடுப்பு எடுத்துள்ள அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மேயர் – காரணம் இதுதான்

0
2123
Shimron Hetmeyer

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக நேற்று நடந்த முடிந்த போது ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி நேற்றைய போட்டியுடன் 7 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மையர் நேற்றைய போட்டியில் 16 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 33* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்றைய போட்டி முடிந்த பின்னர் இன்று அதிகாலையில் அவர் தனது சொந்த ஊரான கயானாவுக்கு சென்றிருக்கிறார்.

- Advertisement -
தந்தையாக போகும் ஷிம்ரோன் ஹெட்மையர்

ஷிம்ரோன் ஹெட்மையருக்கு முதல் குழந்தை பிறக்கப் போகின்றது. முதல் குழந்தை என்பதால் குழந்தை பிறக்கும் நேரத்தில், தனது மனைவியுடன் தான் இருக்க விருப்பம் தெரிவித்து இன்று அதிகாலை தனது சொந்த ஊரான கயானாவுக்கு இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

அதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் பதிவிட்டு அறிக்கையில் “வாழ்த்துக்கள் ஷிம்ரோன் ஹெட்மையர். உங்களது வருகையை எதிர்நோக்கி காத்திருப்போம். முக்கியமான கட்டத்தை எதிர்நோக்கி தற்போது தொடர் சென்று கொண்டிருக்கிறது. உங்களை மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ள ஆவலாக உள்ளோம்” என்றும் ராஜஸ்தான் நிர்வாகம் குறிப்பிட்டு கூறியிருந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பும் ஷிம்ரோன் ஹெட்மையர்

ஷிம்ரோன் ஹெட்மையர் கூடிய விரைவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்துடன் கலந்து கொள்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம். அந்த அணிக்கு இன்னும் 3 லீக் போட்டிகள் மீதம் உள்ளன. அதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி நிச்சயமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் ஷிம்ரோன் ஹெட்மையர் 11 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் குவித்திருக்கிறார் அதுமட்டுமின்றி இவரது பேட்டிங் ஆவெரேஜ் 72.75 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 166.29 ஆக உள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதை கடந்து அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறுவதற்கு ஷிம்ரோன் ஹெட்மையரின் சேவை அந்த அணிக்கு தேவை. எனவே அவர் கூடிய விரைவில் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.