தற்போது பதினைந்து வயதாகும் வைபவ் சூரியவன்சி வயதை பார்க்காமல் அவருடைய திறமையை மட்டுமே பார்க்க வேண்டும் என ஷிகர் தவான் கூறியிருக்கிறார்.
இந்த வயதிலேயே உலகில் பெரிய பந்துவீச்சாளர்கள் எல்லோரையும் அடித்து நொறுக்கி கொண்டு இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 400 ரன்கள் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
வைபவ் சூரியன்வன்சி அதிகபட்சமாக சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய வீரராக இருக்கிறார். மேலும் பெரிய சிக்ஸர்கள் அடிக்கிறார். இந்த வயதில் மட்டும் இல்லாமல் இதுவரை கிரிக்கெட்டில் இவ்வளவு எளிதாக சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய வீரர்கள் யாருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு பந்துக்கு தகுந்த மாதிரி தன்னை உடனுக்குடன் மாற்றிக் கொண்டு, அதே நேரத்தில் அதை சிக்ஸராகவும் அவர் அடிப்பதை நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. குறிப்பாக இந்த வயதிலேயே மணிக்கட்டை பயன்படுத்தி ஹெலிகாப்டர் ஷாட் முறையில் மிகப் பெரிய சிக்ஸர்களை அவர் அடிக்கிறார்.
இதுகுறித்து ஷிகர் தவான் “வைபவ் சூரியவன்சி இளம் வயதில் செய்துள்ளதை பல பெரிய வீரர்கள் கடைசிவரையில் செய்யவில்லை. மேலும் சீனியர் கிரிக்கெட்டில் அவர் பெரிய பவுலர்களை பெரிய சிக்ஸர்கள் அடிப்பதை வயதைக் கொண்டு கணக்கிட கூடாது. அவருடைய திறமையை வைத்துதான் பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க : ஆர்சிபியை முடிச்சு விட்டது திருப்தியா இருக்கு.. விராட் பாய் அதை செஞ்சும் ஜெயிச்சதுதான் சிறப்பானது – சுப்மன் கில் கருத்து
“அதே சமயத்தில் டாப் ஆர்டரில் சிறப்பாக வீரர்கள் விளையாடினால் அவர்களை அவ்வளவு எளிதில் மாற்ற மாட்டார்கள். நான், ரோகித் மற்றும் விராட் டாப் ஆர்டரில் மொத்தமாக பத்து வருடங்கள் தாண்டி விளையாடி இருக்கிறோம். எனவே இந்தப் பையனுக்கும் ஒரு நேரம் வரும். நிச்சயமாக வரும். எனவே அதுவரையில் அவர் காத்திருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.