கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய ஷிகர் தவான்! அவர் கூறியது இதுதான்!!

0
114

ஜிம்பாப்வே தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மனம் திறந்து பேசி இருக்கிறார் அனுபவ வீரர் ஷிகர் தவான்.

மேற்கத்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்கும் இந்த தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஜிம்பாப்வே சென்று விட்டது.

- Advertisement -

காயம் மற்றும் கொரோனா தொற்று ஆகியவற்றின் காரணமாக கடந்த சில தொடர்களில் வெளியில் இருந்த கேஎல் ராகுல் கடைசி நேரத்தில் தனது உடல் தகுதியை நிரூபித்து இந்திய அணிக்குள் வந்திருக்கிறார். ஜிம்பாவே செல்லும் இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா இல்லாத போது மற்றொரு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டன் பொறுப்பேற்று 3-0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றி பெறச்செய்து வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் நிச்சயம் ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் உள்ளே வந்த கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது குறித்து தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார் ஷிகர் தவான்.

“கேஎல் ராகுல் மீண்டும் இந்திய அணிக்குள் வரும் செய்தியை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இது இந்திய அணிக்கும் ஆரோக்கியமான செய்தி. நிச்சயம் இந்த தொடரில் நிறைய ரன்கள் அடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பவார் என நம்புகிறேன். உலக கோப்பை டி20 மற்றும் ஆசிய கோப்பை டி20 இரண்டிற்கும் முன்பாக கேஎல் ராகுல் மீண்டும் உள்ளே வந்திருப்பது இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்திருக்கிறது.” என்றார்.

- Advertisement -

துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், “நான் 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் வந்தேன். அப்போதிருந்து எனக்கு கிடைத்த அனுபவங்களை இளம் வீரர்களுக்கு பகிர்ந்து வருகிறேன். அந்த வகையில் கேஎல் ராகுல் என்னை எதற்காகவும் அணுகினால், நிச்சயம் அவரிடம் நிறைய பகிர்ந்து கொள்வேன். அவர் கேப்டனாக இருப்பது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு சிறந்தது. இன்னும் நிறைய அனுபவங்களை அவருக்கு கொடுக்கவும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவளுடன் இருக்கிறேன்.” என்றார்.