ரோகித் விராட்டை விட.. இவருக்கு பெரிய பங்கு இருக்கு.. அவர் செஞ்சா CT கோப்பை நமக்குதான் – ஷிகர் தவான் கருத்து

0
144
Dhawan

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த முறை முதல் முறையாக 5 சுழல் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்க இருக்கிறது. மேலும் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிப்ரவரி 23ஆம் தேதி துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் விளையாடுகிறது.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி இந்திய ஹீரோ

இந்திய கிரிக்கெட்டில் பொதுவாக ஐசிசி தொடர்களில் மிக வெற்றிகரமான வீரராக இந்திய முன்னாள் வீரர் ஷிகர் தவானை குறிப்பிடுவார்கள். 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் அவர் துவக்க ஆட்டக்காரராக விளையாடினார். அதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார். மேலும் அந்த முறை இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

இத்துடன் இதுவரையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராக ஷிகர் தவான் இருக்கிறார். இரண்டாவது இடத்தில்தான் விராட் கோலி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஷிகர் தவான் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இவரின் பங்கு அதிகமாக இருக்கும்

இது குறித்து ஷிகர் தவான் பேசும்பொழுது “2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நான் திரும்பி ஒரு நாள் கிரிக்கெட்டில் வருவதற்கு மிகவும் முக்கியமாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட எனக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் அது முக்கியமான தொடர். மேலும் அந்தத் தொடரில் நான் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்தேன். பிறகு என்னுடைய பெயர் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது. அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். என் மீசை வரையில் பிரபலமானது”

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி.. நியூசிலாந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல்.. இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு நிம்மதி

“இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணி தொடரை வெல்ல இவருடைய பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். மேலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே தங்களுடைய பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி இருப்பது இந்திய அணியை பலமானதாக மாற்றுகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -