சாம்பியன்ஸ் டிராபி.. நியூசிலாந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல்.. இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு நிம்மதி

0
629
NZ

நாளை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க இருக்கும் நிலையில் நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரர் திடீரென காயத்தின் காரணமான விலகியிருப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை உண்டாக்கி இருக்கிறது.

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இருக்கும் 8 அணிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மிகவும் வலிமையான அணிகள் என கணிக்கப்பட்டிருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில் அந்த அணியில் நட்சத்திர வீரர் விலகி இருப்பது அணியின் பலத்தை குறைப்பதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே விலகிய முக்கிய வீரர்

சாம்பியன்ஸ் டிராபி நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் பென் சியர்ஸ் காயத்தின் காரணமாக சமீபத்தில் விலகி இருந்தார். அவருக்கு பதிலாக இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி இடம் பெற்றார். புதிய வேகப்பந்து வீச்சாளரை உருவாக்கி நியூசிலாந்து நிர்வாகம் கொண்டு வந்த நிலையில் இது பின்னடைவாக அமைந்தது.

மேலும் நியூசிலாந்து அணி இடம் பெற்று இருக்கும் குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. எனவே இந்த குழுவில் எந்த இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று கணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. நியூசிலாந்து இந்திய அணிகள் பலமாக இருந்த போதிலும் பாகிஸ்தான் தங்கள் உள்நாட்டில் விளையாடுவது அந்த அணியை பலமான அணியாக மாற்றுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நட்சத்திர வீரர் திடீர் விலகல்

இப்படியான நிலையில் நியூசிலாந்து அணியின் மற்றும் ஒரு நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் காலில் திடீரென காயம் ஏற்பட சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து உடனடியாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக வலது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜேமிசன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் கோலியுடன் எங்க பாபரை ஒப்பிடுபவர்கள் முட்டாள்கள்.. 35 சதம் முடியுமா? – கம்ரன் அக்மல் பேட்டி

நாளை சாம்பியன்ஸ் டிராபி தொடர் துவங்குவதற்கு முன்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, முறைசாரா பயிற்சி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய பொழுது லாக்கி பெர்குசன் காலில் காயமடைந்ததாகவும் இதனால் உடனடியாக அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுகிறார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

- Advertisement -