ஜிம்பாப்வே போன்ற ஒரு அணியுடன் விளையாடுவது அவசியமா? – பத்திரிக்கையாளர் சந்திப்பை கலகலப்பாக்கிய ஷிகர் தவான்!

0
666
Shikar dhawan

இந்திய கிரிக்கெட் அணி கேஎல் ராகுல் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்தத் தொடருக்கு முன்பு ஷிகர் தவன் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய இன்னொரு இந்திய அணி வருகின்ற இருபத்தி ஏழாம் தேதி துவங்க இருக்கின்ற ஆசிய கோப்பை தொடருக்காகத் தயாராகிவருகிறது. ஜிம்பாப்வே அணியுடனான தொடர் வருகின்ற 18ஆம் தேதி துவங்குகிறது. அடுத்த இரண்டு போட்டிகள் 20, 22 தேதிகளில் நடக்கிறது.

- Advertisement -

இதற்கான இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்ட கேஎல் ராகுல் மற்றும் தீபக் சேகர் இருவரும் இடம் பிடித்திருக்கிறார்கள். மேலும் ருதுராஜ், சஞ்சு சாம்சன், சுப்மன் கில், இஷான் கிஷான் போன்ற இளம் பேட்ஸ்மேன்களும் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்தத் தொடர் இளம் வீரர்கள் தங்களை நிரூபித்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

ஜிம்பாப்வே தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ஆசிய கோப்பையில் விளையாட இருக்கும் வீரர்கள் ஆவேஸ் கான் மற்றும் கே எல் ராகுல் இருவரும்தான். மற்ற யாரும் இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. இந்த தொடரில் போட்டிகள் எல்லாமே ஜிம்பாப்வே ஹராரே நகரில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கிறது.

தற்போது ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ஷிகர் தவான் எதிர்கொண்டார். அப்பொழுது பத்திரிக்கையாளர் ஒருவர் ” ஷிகர், இந்த நேரத்தில் ஜிம்பாப்வே அணியில் விளையாடி வருவது எவ்வளவு கடினமானது? உலக கிரிக்கெட்டில் நீண்ட காலமாக போராடி வரும் அவர்கள் சமீபத்தில் இந்திய அணி உடன் அதிகம் விளையாடியது இல்லை. ஜிம்பாப்வே போன்ற ஒரு அணியை நீங்கள் வெல்ல எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டார்.

- Advertisement -

இந்தக் கேள்வியை சரியாய் கவனிக்காத ஷிகர் தவானுக்கு புரியவில்லை. அதற்கு சிகர் தவான் ” ஹலோ சார் நீங்கள் கேட்டது எனக்குப் புரியவில்லை இன்னொரு முறை எனக்காக திருப்பிக் கேட்க முடியுமா?” என்று திருப்பிக் கேட்க அந்த இடம் கலகலப்பானது.

பின்பு நிருபர் கேட்ட கேள்வியை புரிந்து கொண்டு ஷிகர் தவான் பதில் அளித்தபோது ” நாங்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுவது உலக கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லது என்று உணர்கிறேன். இம்மாதிரியான தொடர்களில் எங்களிடம் இருக்கும் இளம் வீரர்களுக்கு நாங்களும் வாய்ப்பு தர முடியும் இது எங்களுக்கு நல்லது. இந்தியா போன்ற ஒரு பெரிய அணியுடன் விளையாடுவது அவர்களுக்கு அனுபவத்தை அளிக்கும் அதனால் அவர்களுக்கும் நல்லது. வெவ்வேறு இடங்களில் சூழ்நிலைகளில் விளையாடுவது எப்பொழுதும் சவாலான ஒரு விஷயம். இதன் இந்த தொடரின் மூலம் இந்திய வீரர்களுக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. நாங்களும் கற்றுக்கொள்ள இதில் இருக்கிறது. ஜிம்பாப்வே வீரர்களும் இந்த தொடரில் இருந்து கற்றுக் கொள்வார்கள்” என்று தெரிவித்தார்!