இப்பவும் கில்லிதான்.. கேப்டன்ஷியில் தல தோனி ஆட்டம் ஆரம்பம்.. தரமான 2 செய்கை.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

0
321
Dhoni

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் முந்தைய கேப்டன் ருதுராஜ் செய்த தவறுகளை செய்யாமல் தற்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி அசத்தலான சம்பவங்களை செய்து ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மகேந்திர சிங் தோனி நேரடியாக பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் சிஎஸ்கே அணியில் கான்வே மற்றும் அஸ்வின் இருவரும் நீக்கப்பட்டு, ஷேக் ரஷீத் மற்றும் ஜேமி ஓவர்டன் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

பவர் பிளேவில் காட்டிய பிரிலியன்ஸ்

இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் மொத்தம் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் முதல் ஓவரை வீசிய கலில் அகமது எய்டன் மார்க்ரம் விக்கெட்டை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து இவருடன் இணைந்து பந்து வீசிய அன்சூல் காம்போஜ் அபாயகரமான நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த நிலையில் தோனி இந்த முறை பவர் பிளேயர் முழுவதும் இந்த இரண்டு பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார். சுழல் பந்துவீச்சாளர்கள் யாரையுமே கொண்டு வரவில்லை. மேலும் முதல் 6 ஓவர்களில் லக்னோ அணி 42 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

பழைய கூட்டாளியுடன் அசத்தல்

இதைத்தொடர்ந்து நூர் அகமது இருக்கும்பொழுதே பவர் பிளே முடிந்ததும் ரவீந்திர ஜடேஜாவை தோனி கொண்டு வந்தார். ரவீந்திர ஜடேஜா தனது இரண்டாவது ஓவரில் அபாயகரமான மிட்சல் மார்சை வெளியேற்றினார். இவருடன் சேர்ந்து ஜெமி ஓவர்டன் இரண்டு ஓவர்கள் வீசி முடித்திருந்தார். எனவே இதற்கு மேல் முக்கிய பந்துவீச்சாளர்களை வைத்து மட்டுமே மீதி ஓவர்களை முடித்துக் கொள்ளும் சூழ்நிலை இருந்தது.

இதையும் படிங்க : உங்க ஈகோவை ஒதுக்கி வைங்க.. ரோகித் சொன்னத செய்யாம இருந்தா.. மும்பை கண்டிப்பா தோத்துருக்கும் – பயிற்சியாளரை வெளுத்த ஹர்பஜன் சிங்

இப்படி இருந்த பொழுதும் இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் களத்தில் இருந்த பொழுதும் தோனி ரவீந்திர ஜடேஜாவை மூன்றாவது ஓவர் வீச வைத்தார். இந்த ஓவரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஆயுஸ் பதோனியை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். கடந்த போட்டிகளில் ருதுராஜ் செய்த எந்த தவறையும் தோனி செய்யவில்லை. தனது பழைய கூட்டாளி ஜடேஜாவை வைத்து முக்கியமான நேரத்தில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி, தான் இன்னும் கேப்டன்ஷியில் கில்லிதான் என்று நிரூபித்து இருக்கிறார்!

- Advertisement -