கவலைப்படாதீங்க ரோகித் கோலி விளையாடுவாங்க.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜெய் ஷா மகிழ்ச்சியான அறிவிப்பு

0
5195
Jay

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்று விட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்து எத்தனை உலக கோப்பைகளில் கட்டாயம் இருப்பார்கள் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பு ஏற்பது உறுதியான ஒன்றாகவே இருக்கிறது. அவர் பயிற்சியாளராக வரும் பொழுது கேப்டனுக்கு நிகரான செல்வாக்கு அவருக்கும் அணியில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவரை வைத்து மூன்று வடிவத்திற்குமான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது.

- Advertisement -

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மூத்த வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் அடுத்தடுத்து விலக்கி வைக்கும் யோசனை இருப்பதாகவும் சொல்லப்பட்டது. மேலும் அவர்களாகவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகியும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றதும் 2025 சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2026 t20 உலக கோப்பை மற்றும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை என அடுத்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நான்கு ஐசிசி தொடர்கள் இருக்கின்றன. இதற்காக இந்திய அணியும் மேலும் தனித்திட்டங்களையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு கம்பீருக்கு இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் பற்றி பேசி இருக்கும் ஜெய் ஷா கூறும் பொழுது ” இந்தியா அனைத்து பட்டங்களையும் வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எங்களிடம் சிறந்த பெஞ்ச் வலிமை இருக்கிறது. தற்போது ஜிம்பாப்வே டி20 தொடருக்கு செல்லும் இந்திய அணியில், டி20 உலக கோப்பையில் விளையாடிய மூன்றே வீரர்கள் மட்டும்தான் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : இந்திய டி20ல ஓய்வு பெற விரும்பல .. ஆனா இந்த நிலைமைதான் ஓய்வு பெற வெச்சது – ரோகித் ஓபன் டாக்

நாங்கள் நினைத்தால் மூன்று தரமான இந்திய அணியை களம் இறக்க முடியும். எங்களிடம் அவ்வளவு வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அடுத்து சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இரண்டையும் வெல்ல விரும்புகிறோம். மேலும் மிக நிச்சயமாக இந்த இரண்டு தொடர்களிலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம்பெற்று விளையாடுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் கம்பீர் பயிற்சியாளராக வந்தாலும் இவர்கள் இரண்டு ஆண்டு காலம் விளையாடுவது உறுதியாக இருக்கிறது!

- Advertisement -