இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் முதல் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் பேசியிருக்கிறார்.
இந்த இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது சுற்று முதல் போட்டியில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இரண்டு அணிகளுமே தங்களது முதல் சுற்றில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இரண்டாவது சுற்று முன்னேறி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளின் பலம்
கடைசியாக இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதிக்கொண்டன. அந்தத் தொடரில் இரண்டு அணிகளின் பேட்டிங் யூனிட்டும் மிகவும் சிறப்பாக விளையாடின. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் யாரும் போட்டியை மாற்றிவிட முடியும் என்கின்ற அளவுக்கு பேட்ஸ்மேன்கள் இரண்டு பக்கமும் தாக்குதலாக விளையாடினார்கள்.
இந்த தொடரில் இந்திய அணி தனது பந்துவீச்சாளர்களை வைத்து இறுதியில் வெற்றி பெற்றது. மேலும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த உலகக் கோப்பை தொடரில் ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் விளையாடுகிறது. இது அந்த அணிக்கு இன்னொரு கூடுதல் சாதகத்தை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவர்தான் வித்தியாசம்
இதுகுறித்து ஷான் பொல்லாக் பேசும் பொழுது ” என்னைப் பொறுத்த வரையில் இந்தியா தென் ஆப்பிரிக்கா 2 அணிகளும் மிகச் சிறப்பாக போட்டியிடக்கூடிய வீரர்களை சம அளவில் வைத்திருக்கின்றன. அபிஷேக் ஷர்மாவுக்கு இணையாக குயின்டன் எங்கள் அணியில் விளையாட முடியும். அதேபோல எந்த ஒரு வீரருக்கு இணையாகவும் மார்க்ரம் போட்டியிட முடியும்”
இதையும் படிங்க: பாகிஸ்தான் கேப்டன் பாவம்.. கோச் பண்ண முட்டாள்தனமான வேலைதான் தோல்விக்கு காரணம் – முகமது கைப் பேச்சு
” நான் இரண்டு அணிகளையும் எடுத்து வைத்து கூர்மையாக பார்க்கும் பொழுது வித்தியாசத்தை உருவாக்கக் கூடிய வீரர்களாக இரண்டு பவுலர்கள்தான் இருக்கிறார்கள். அது இந்திய அணியின் வரும் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா. இவர்கள் கொடுக்கும் தாக்கம் இந்திய அணியாக வெற்றி பெறக் கூடிய அநியாயம் மாற்றுகிறது” என்று கூறி இருக்கிறார்.






