நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் நாளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருவரும் ஒரு வாக்குறுதியை தந்து இதுவரையில் அதை காப்பாற்றி வருவதாக ஷஷான்க் சிங் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டும் இல்லாமல் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தக்க வைத்து அசத்தியிருக்கிறது. இதற்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள்.
இருவரும் தந்த வாக்குறுதி
இது குறித்து ஷஷான்க் சிங் பேசும் பொழுது ” இந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் சேர்ந்த முதல் நாளில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் எங்கள் மொத்த அணிக்கும் ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள். அதாவது இந்த அணியின் மூத்த வீரர் சாகலுக்கு என்ன மரியாதை கொடுக்கப்படுமோ, அதே மரியாதை பஸ் டிரைவர் வரையில் எல்லோருக்கும் சமமாக கொடுக்கப்படும் என்று கூறினார்கள்”
“அவர்கள் என்ன சொன்னார்களோ அதை இன்று வரையில் காப்பாற்றி வருகிறார்கள். அவர்கள் பஸ் டிரைவர் முதல் அணியின் சீனியர் வீரர் வரை ஒரே மரியாதையை இதுவரையில் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் செய்துள்ள இந்த விஷயம் எங்கள் அணியை பற்றி நிறைய விஷயங்களை சொல்கிறது”
ரிக்கி பாண்டிங் செய்த அற்புதம்
“ரிக்கி பாண்டிங் எங்கள் அணியின் கலாச்சாரத்தை மாற்றி இருக்கிறார். அவர் எங்களின் மனநிலையை மற்றும் நம்பிக்கைகளை மாற்றியிருக்கிறார். எனவே இந்த விஷயத்திற்கு அனைத்து பெருமையும் அவருக்கே போய் சேர வேண்டும். ஏனென்றால் வெளிப்படையாக விளையாட்டுப் பற்றிய எங்களது பார்வையை மாற்றியவர் அவர்தான்”
இதையும் படிங்க : முதுகுல குத்துறது ரொம்ப ஈசி.. ஆனா நான் அவருக்கு அந்த நல்லத செய்யணும்னு நினைச்சேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
“நான் கலாச்சாரம் என்று சொல்வது, நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அக்கறை காட்டிக் கொள்ளுதல், ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்துதல் போன்றவை. இதுவெல்லாம் சொல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் ஆனால் செய்வதற்கு மிகவும் கடினமானது. இதைத்தான் எங்கள் அணியில் ரிக்கி பாண்டிங் வளர்த்து எடுத்து இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






