நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக தவறுதலாக வாங்கப்பட்டு சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார். மேலும் ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி தன்னிடம்பேசியது குறித்தும் அப்பொழுது என்ன நடந்தது? என்பது குறித்தும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 44 ரன் ஆவரேஜ் மற்றும் 164 ஸ்ட்ரைக் ரேட்டில் 354 ரன்கள் பினிஷர் ஆக வந்து குவித்தார். அவர் விளையாடிய நேர்த்தி ஒரு நட்சத்திர வீரரை போலவே இருந்தது. இதனால் திடீரென ஐபிஎல் தொடரில் அவருடைய மதிப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி உடன் தான் பேசிய பொழுது அவர் எப்படி நடந்து கொண்டார்? என்பது குறித்து அவர் கூறி இருக்கிறார். அதே சமயத்தில் இந்திய முன்னால் வீரர் அமித் மிஸ்ரா விராட் கோலிக்கு பதவியும் அதிகாரமும் புகழும் வந்ததும் மாறிவிட்டதாக விமர்சித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி குறித்து ஷஷாங்க் சிங் கூறும் பொழுது “இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது நான் அவருடன் உரையாட விருப்பப்பட்டு போய் பேசினேன். நான் நின்று கொண்டிருந்தேன் அவரும் நின்று கொண்டே பேசினார். திடீரென பார்க்கும் பொழுது நாங்கள் 40 நிமிடம் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்.
நாங்கள் முடிந்த பிறகு இரவு 12.45 போல பேச ஆரம்பித்தோம். அங்கிருந்து எப்படி 40 நிமிடங்கள் ஆனது என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் விராட் கோலி என்னிடம் கிரிக்கெட் மற்றும் அதன் நுட்பம், ஷாட்கள் மற்றும் மனநிலை குறித்து எனக்கு விரிவாகக் கூறினார்.
அவர் என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்த போது இதை செய்து கொண்டே அவர் இருக்க வேண்டும் என்பது போல நான் உணர்ந்தேன். அவர் என்னுடைய வானிலை அணியான சத்தீஸ்கர் வீரர் போல மிகவும் நட்புடன் இருந்தார். நான் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிமையாகப் பேசினார். அவரிடம் பேசுவது மிகவும் நன்றாக இருந்தது.
இதையும் படிங்க : 2வது டெஸ்ட்.. இங்கிலாந்து பிளேயிங் XI.. ஆண்டர்சன் இடத்துக்கு வந்த வீரர்.. வெஸ்ட் இண்டீஸ் தப்பிக்குமா?
அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படி வேலை செய்ய வேண்டும்? என்று கூறினார். அவருடைய பேச்சில் எனக்கு நிறைய நம்பிக்கையைக் கொடுத்தார். அவரிடம் பேசிய பொழுது அவர் எப்பொழுதும் நெகட்டிவாக பேச மாட்டார், பாசிட்டிவாக மட்டுமேதான் பேசுவார் என்று உணர்ந்தேன்” என்று கூறி இருக்கிறார்.