தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி இரண்டாம் கட்ட போட்டிகளில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் நட்சத்திர வீரர்கள் ஏமாற்றிய நிலையில் சர்துல் தாக்கூர் அதிரடி சதம் அடித்து அணியை காப்பாற்றி இருக்கிறார்.
மும்பை அணியில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ரகானே ஸ்ரேயாஸ் ஐயர் என நிறைய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் இதே அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் சர்துல் தாக்கூர் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அபாரமாக பந்து வீசிய அந்த அணி மும்பை அணியை 47 ரன்னுக்கு ஏழு விக்கெட் என சரித்தது. முன்னணி பேட்ஸ்மேன் அனைவருமே மும்பை அணிக்கு பெரிய ஏமாற்றம் கொடுத்தார்கள். இந்த நிலையில் சர் தூள் தாக்கூர் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 55 பந்தில் 51 ரன் எடுத்தார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 120 சேர்த்தது. உமர் நசீர் மற்றும் யுத்வீர் சிங் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சுபம் கஜோரியா 53 ரன்கள் எடுத்தார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 206 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை அணிக்கு பந்துவீச்சில் அவஸ்தி ஐந்து விக்கெட் கைப்பற்றினார். சர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா 28, ஜெய்ஸ்வால் 26, ரகானே 16, ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்கள் என மீண்டும் ஏமாற்றம் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். மும்பை அணி 101 ரன்னுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து, தோல்வியின் விளிம்பில் சிக்கி இருந்தது.
இந்த நிலையில் சர்துல் தாக்கூர் மற்றும் தனுஷ் கோட்டியன் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். முதல் இன்னிங்ஸில் அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை காப்பாற்றிய இவர்கள் இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்து அசத்தினார்கள். சிறப்பாக விளையாடிய இந்த இருவரும் அரை சதம் தாண்டினார்கள்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபியில்.. இந்த இந்திய வீரர் விக்கெட்.. அந்த வழியில் ஈஸியா கிடைக்கும் – பசித் அலி பேச்சு
இந்த ஜோடியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரில் சர்துல் தாக்கூர் 15 பந்தில் அதிரடி சதம் அடித்து 119 பந்துகளில் 17 பவுண்டரிகள் உடன் 113 ரன்கள், தனுஷ் கோட்டியன் 119 பந்துகளில் 6 பவுண்டரிகள் உடன் 58 ரன்கள் எடுத்து, 234 பந்துகளில் 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இரண்டாம் நாள் முடிவில் ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள். தற்போது மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்து 188 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இரண்டு இன்னிங்களிலும் சர்துல் தாக்கூர் தனி வீரராக மும்பை அணியை காப்பாற்றி இருக்கிறார்!