அந்த ஒரு விஷயம் நடந்தா.. என்னை யாருன்னு பாப்ப.. ஃபார்ம் அவுட் பத்தி ரோஹித் இதுதான் சொன்னார் – சர்துல் பேட்டி

0
87

சமீபத்தில் நடைபெற்று முடித்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நன்றாக தயாராகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரரான சர்துல் தாகூர் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

மீண்டும் ஃபார்மில் ரோஹித்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா வந்த வேகத்தில் வெளியேறினாலும், அடுத்த போட்டியில் அவர் பேட்டிங் செய்த விதம் மிகவும் நன்றாக இருந்தது. சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர்களில் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்தார். ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் அடித்த சதம் ஒட்டுமொத்தமாக அவர் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பாராட்டுகளை குவித்து வருகிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் செயல்பட்டது போலவே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ரோஹித் சர்மா கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு பெரிதும் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி விளையாடிய ரோஹித் அதிலும் பெரிய ரன்கள் அடிக்காமல் குறைவான ரன்களுக்கு வெளியேறினார். அப்போது சர்துல் தாக்கூர் அது குறித்து விவாதித்த போது ரோகித் சர்மா கூறிய வார்த்தைகள் குறித்து தாகூர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

என்னிடம் இதைத்தான் கூறினார்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்த விதத்தை பார்த்தால் ஒருமுறை கூட பார்மில் இல்லாதது போல தெரியவில்லை. சில பந்துகளில் அவர் அவுட் ஆகலாம், அது வலைகளில் அனைவருக்கும் பொதுவாக நடக்கக் கூடியதுதான். ஆனால் அதைத் தவிர அவர் வெளியே மிகவும் சௌகரியமாகவே உணர்ந்தார். அவர் பெரிதாக செயல்படாமல் போனதற்கு அதிர்ஷ்டத்தை மட்டுமே குறை கூற முடியும். அவர் அந்த சிக்ஸர்களை அடிக்கும் விதத்தை பார்த்தால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் ஆபத்தான பேட்மேன். அவரது தரம் அனைவரையும் விட வித்தியாசமானது.

இதையும் படிங்க:202 ரன்.. எல்லீஸ் பெர்ரி ரிச்சா கோஷ் சூறாவளி ஆட்டம்.. மெகா இலக்கு சேஸ்.. கெத்து காட்டிய ஆர்சிபி.. மகளிர் ஐபிஎல் டி20

அவர் எங்களுக்காக அந்த ரஞ்சி ஆட்டத்தில் விளையாடி ரன்கள் எடுக்காத போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ரன்கள் எடுக்காததால் நாங்கள் அது குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ரோகித் சர்மா மிகவும் நம்பிக்கையுடன் என்னிடம், ‘இப்போது ரன்கள் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் எனக்கு தேவையானது ஒரே ஒரு இன்னிங்ஸ் தான். அதற்குப் பிறகு ரன்கள் மீண்டும் தானாக வரும்” என்று கூறி இருந்தார் என தாகூர் கூறியிருக்கிறார்.

- Advertisement -