ஆஸில பெட்ஷீட் மாத்தவே 5 மாடி ஏற வச்சாங்க.. ரகானே ரவி சாஸ்திரி சண்டை போட்டாங்க – ஷர்துல் தாக்கூர் பேட்டி

0
299

ஆஸ்திரேலியாவில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றது அப்பொழுது எளிதில் யாராலும் மறக்க முடியாது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய சர்துல் தாக்கூர் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பட்ட சிரமங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

2020 மற்றும் 2021ம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு விராட் கோலி இந்தியா திரும்ப மீதமிருந்த மூன்று டெஸ்ட் போட்டிகளையும் இந்திய அணி இரண்டில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. அதிலும் கப்பாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றி யாராலும் மறக்க முடியாதது.

ஆனால் அந்த சமயம் கொரோனா காலகட்டத்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு இந்திய அணி எதிர்ப்பு தெரிவிக்கவே குயின்ஸ்லேண்ட் சுகாதார நிழல் அமைச்சர் ரோஸ் பேட்ஸ், இந்திய அணி விதிகளின்படி விளையாடவில்லை என்றால் இங்கு வர வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தியாவின் ஆல் ரவுண்டானா சர்துல் தாக்கூர் ஆஸ்திரேலியாவில் இந்தியா பட்ட துயரங்களை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர்கள் எங்களை வழி நடத்திய விதம் மிகவும் மோசமானது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் எந்த விதமான பணியாளர் சேவையும் இருக்காது. நீங்கள் உங்களது பெட்ஷீட்களை மாற்ற விரும்பினால் அந்த ஹோட்டலில் நான்கு அல்லது ஐந்து ஃப்ளோர்கள் நடந்தே சென்று புதிய பெட்சீட்களை பெற வேண்டும். சிட்னியில் இருந்து பிரிஸ்பேனுக்கு நாங்கள் செல்லும் போது இந்தியர்கள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு வர விரும்பவில்லை என்றால் அவர்கள் வரவே வேண்டாம் என்று குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் வெளிப்படையாகவே கூறியிருந்ததை நாங்கள் அறிந்தோம். அவர்களை ஹோஸ்ட் செய்வதற்கு அவசியமும் இல்லை, அதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை என்று குயின்ஸ்லாந்து கவர்னர் கூறியிருந்ததையும் நாங்கள் அறிந்தோம்.

உண்மையில் அந்த டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி வெளியேறிய பிறகு எங்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் ரகானே ஆகியோர் நாங்கள் விரும்பிய விஷயங்களை பெறுவதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் வாதிட்டே அனைத்தையும் பெற வேண்டியதாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:எங்களுக்கு 19 வயசு.. அப்பவே யாரும் சொல்லாத அட்வைஸ ரோகித் எனக்கு சொன்னாரு – ஓஜா வெளியிட்ட தகவல்

மேலும் அப்போது ஆஸ்திரேலியா கேப்டனாக இருந்த டிம் பெயின் இந்திய அணியை எந்தவித அழுத்தத்திற்கும் உள்ளாக்கவில்லை என்று கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவித்த தாகூர், அவர் பொய்யான விஷயங்களை உருவாக்கி உருவாக்கி ஊடகத்தில் அதனை முடி மறைக்க பார்க்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -