கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாகிறாரா சர்துல் தாக்கூர்? – ரிப்போர்ட்!

0
387

ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்பதால் சர்துல் தாக்கூர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் வந்திருக்கிறது.

வருகிற மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 16வது சீசன் துவங்க உள்ளது. கடந்த வருடத்தை போல இந்த வருடமும் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஆனால் இந்த வருடம் அணிகள் தங்களது சொந்த மைதானங்களில் ஒரு போட்டியும் வெளி மைதானங்களில் ஒரு போட்டியிலும் விளையாடுகிறது.

- Advertisement -

முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் மார்ச் 31ஆம் தேதி நடைபெறுகிறது. அனைத்து வீரர்களும் தங்களது அணிக்கு திரும்பி பயிற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். ஐபிஎல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறத் துவங்கிவிட்டன.

வழக்கத்திற்கு மாறாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் காயம் காரணமாகவும் சொந்த காரணங்களுக்காகவும் விளையாடவில்லை. அதில் குறிப்பிடத்தக்க விதமாக ஷ்ரேயாஸ் ஐயர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போது, மீண்டும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு ஸ்கேன் செய்ய அழைத்துச் செல்லப்பட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். காயம் சற்று தீவிரமாக இருப்பதால் அறுவை சிகிச்சைக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். இதனால் அடுத்த நான்கு ஐந்து மாதங்களுக்கு எந்தவித சர்வதேச போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட மாட்டார் என்று தகவல் வந்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகி உள்ளதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இல்லாமல் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. அதே நேரம் புதிய கேப்டனாக யார் வருவார் என்று எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் அணியில் கடந்த சீசன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடிய சர்துல் தாக்கூர், வீரர்கள் மாற்று முறைப்படி ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார்.

முதல் முறையாக இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாட உள்ளார். கேப்டன் பொறுப்பிற்கு அவரது பெயர் அடிபடுகிறது. அதேநேரம் நீண்ட காலமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் சுனில் நரேன் பெயரும் அடிபடுகிறது. ஆனால் சுனில் நரேன் தனக்கு கேப்டன் பொறுப்பு வேண்டாம் என்று கூறிவருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆகையால் சர்துல் தாக்கூர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த அறிவிப்பை ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக நடத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஷா ருக் கான் பங்கேற்கிறார் என்றும் தகவல்கள் வந்திருக்கிறது.