ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2025 தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் விளையாடி வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியை லக்னோ வீரர் சர்துல் தாகூர் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் அணியை சிக்கலில் உள்ளாக்கி இருக்கிறார்.
இந்த போட்டியை பொருத்தவரை டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பண்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால் தவறான முடிவை எடுக்கிறார் என்று அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் தன் முடிவு சரி என்பதை, சர்துல் தாக்கூர் மூலம் பண்ட் நிரூபித்தார். லக்னோ அணியின் முதல் ஓவரை சர்துல் தாக்கூர் வீச முதல் ஓவரில் பௌண்டரியுடன் 6 ரன்கள் மட்டுமே வந்தது.
அதன் பிறகு ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் மீண்டும் வந்த தாகூர் ஒரு தனது விக்கெட் வேட்டையை நடத்த ஆரம்பித்தார். முதல் பந்தில் அபிஷேக் சர்மாவை அவுட் ஆக்கி சன்ரைசர்ஸ் அணிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இதனால் வெறும் 6 ரன்னில் அபிஷேக் ஷர்மா நடையை கட்டினார். அதற்குப் பின்னர் கடந்த போட்டியில் சதம் அடித்த இசான் கிசான், இந்த போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தாகூர் தனது திறமையை நிரூபித்தார்.
அதற்குப் பிறகு 16வது ஓவரை வீச வந்த தாகூர் தனது இரண்டாவது பந்தில் அபிநவ் மனோகரை வெளியேற்றினார். அதற்குப் பின்னர் தனது கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை வீசி முகமது சாமியை ஆட்டம் இழக்க செய்து வெளியேற்றினார். இதன் மூலமாக சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தாகூர் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியா இந்த 2 ஸ்பெஷல் விஷயம் கையில வச்சிருக்கார்.. இந்திய கேப்டன்ஸ் அவர் பின்னாடி நிப்பாங்க – இர்பான் பதான்
லக்னோ அணிக்கு பந்துவீச்சு பலவீனமாக இருந்ததால் சன்ரைசர்ஸ் அணி இந்த முறை 300 ரன்கள் நிச்சயமாக அடிக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தை தனது துல்லியமான பந்துவீச்சின் மூலமாக சரதுல் தாகூர் முறியாடித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் தாகூர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. இந்த ஆண்டு லக்னோ அணியில் காயத்தால் மோஷின்கான் விலக, அவருக்கு பதிலாகவே தாகூர் இடம் பிடித்த நிலையில், தற்போது அதிக விக்கெட் எடுத்து ஊதா நிற தொப்பையும் தன் வசம் வைத்திருக்கிறார். தாகூர் மொத்தமாக 6 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்