இந்திய கிரிக்கெட்

47-7 டு 120.. நான் மத்தவங்க மாதிரி கிடையாது.. அகர்கர் கொஞ்சம் இத பார்க்கணும் – சர்துல் தாக்கூர் பேட்டி

உள்நாட்டு போட்டிகளில் வெளிப்படுத்தப்படும் திறமைகளுக்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும் என மும்பை அணிக்கு ரஞ்சிபோட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி வீரர் சர்துல் தாக்கூர் கேட்டிருக்கிறார்.

- Advertisement -

தற்போது மும்பை மாநில அணிக்கும் ஜம்மு காஷ்மீர் அணிக்கும் இடையே மும்பையில் ரஞ்சி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்கள் ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மா, ரகானே, ஸ்ரேயா ஐயர் என நட்சத்திர பட்டாளங்கள் மும்பை அணிக்காக களம் இறங்கின.

47 ரன்னுக்கு ஏழு விக்கெட்

இந்த நிலையில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணி அதிர்ச்சி அளிக்கும் விதமாக 47 ரன்னுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இப்படியான சூழ்நிலையில் சர்துல் தாக்கூர் சிறப்பாக விளையாடி அதிரடியாக 55 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி 120 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதைத்தொடர்ந்து விளையாட வந்த ஜம்மு காஷ்மீர் அணி 23 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை அணியின் பந்துவீச்சில் அவஸ்தி ஐந்து விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சர்துல் தாக்கூர் தன் பங்குக்கு இரண்டு விக்கெட் கைப்பற்றி வேகப்பந்து ஆல் ரவுண்டராக ஜொலித்தார். கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வேகப்பந்து ஆல் ரவுண்டர் இடத்திற்கு சர்துல் தாக்கூர் கழட்டிவிடப்பட்டு நிதீஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

திறமையை மதிப்பில் கொள்ள வேண்டும்

இதுகுறித்து பேசி இருக்கும் சர்துல் தாக்கூர் கூறும் பொழுது “என்னுடைய தரத்தைப் பற்றி நான் எப்படி பேச முடியும்? அதைப்பற்றி மற்றவர்கள்தான் பேச வேண்டும். ஒருவருக்கு தரம் இருந்தால் அவருக்கு அதிக வாய்ப்புகள் தருவதை பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகளில் நான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். எளிமையான சூழ்நிலையில் எல்லோரும் சாதிக்க முடியும். ஆனால் பாதகமான சூழ்நிலையில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பது முக்கியம். நான் இந்த சவாலை விரும்புகிறேன்”

இதையும் படிங்க : ஆர்சிபி டீமுக்கு.. அந்த தகுதி இருக்கிற ஒரே ஆள் விராட் கோலிதான்.. தயங்காம செய்யுங்க – ஏபி டிவில்லியர்ஸ் ஆதரவு

“கடந்த காலத்தில் நடந்ததை மறந்து விட வேண்டும். அது எப்பொழுதும் மாறப்போவது கிடையாது. நாம் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும்? என்பதை பற்றி யோசிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by