இந்திய கிரிக்கெட்

அபிஷேக் வேற மாதிரி ஒரு பிளேயர்.. அவர் இந்த இரண்டு விஷயங்களை சாதாரணமாக செய்யறாரு – ஷேன் வாட்சன் பாராட்டு

இந்திய டி20 அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவின் வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று இதில் நான்காவது போட்டி குயின்ஸ்லேண்ட் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

அபிஷேக் சர்மா அதிரடி

இந்த தொடரில் இந்தியா தோல்வி அடைந்த போட்டியில் இந்தியாவுக்கு தனி ஒரு வீரராக நின்று அரைசதம் அடித்தார். அந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதிரடியாக விளையாடிய போதும் சரியான ஷார்ட் செலெக்சன் உடன் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடி இருந்தார்.

மேலும் தற்போது டி20 கிரிக்கெ தரவரிசையில் முதல் இடம் பிடித்த வீரராக இருக்கிறார். தற்போது ஆஸ்திரேலியாவில் வந்தும் சிறப்பாக அவர் விளையாடி இருப்பதால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். மேலும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

மிகவும் சிறப்பான வீரர்

இதுகுறித்து ஷேன் வாட்சன் பேசும் பொழுது “அவர் விளையாடுவதை பார்ப்பது ஒரு சிறந்த அனுபவம். அவர் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடுகிறார். அவருக்கு பயம் என்பதே கிடையாது. ஆனால் அவருக்கு தேவையானதை மாற்றி அமைக்கும் திறன் இருக்கிறது”

இதையும் படிங்க : பவர் ஹிட்டர் மதிப்பு மாறனும்னா.. டி20 கிரிக்கெட்டில் இந்த புது விதி அவசியம் – இந்திய முன்னாள் வீரர்

“கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அவரது பரிணாம வளர்ச்சியை பார்ப்பது மிகவும் சிறந்ததாக இருக்கிறது. அவருக்கு முதன் முதலாக சன்ரைசர்ஸ் அணியில் வாய்ப்புகள் கிடைத்தது. பின்னர் அவர் தொடர்ந்து ஒரே மாதிரி அதிரடியாக விளையாடுகிறார். அவரிடம் பல்வேறு திறமைகள் இருக்கிறது. வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் இந்த இரண்டு திறமைகளை வைத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts