” என்னை நீங்கள் வேறு மஞ்சள் நிற ஜெர்சியில் பார்ப்பீர்கள் ” என தோனி ஏன் கூறினார் தெரியுமா ? உண்மையை உடைத்த ஷேன் வாட்சன்

0
6960
Shane Watson and MS Dhoni

2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிதாக அமையவில்லை. சீசன் தொடக்கத்தில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதல் 8 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து தடுமாறியது. மிக முக்கியமாக கேப்டனான பிறகு ஜடேஜா தன் தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்த தவறினார். இதனால் அவரது பேட்டிங் மட்டுமல்ல பீல்டிங்கும் பாதிக்கப்பட்டது. எளிய கேட்ச்களையும் பிடிக்க முடியாமல் சோர்வாகாக் காணப்பட்டார்.

தன்னால் இதைச் சமாளிக்க முடியவில்லை என ஜடேஜா உணர்ந்தப் பின் உடனே தன்னிடம் இருந்த கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்துவிட்டார். கேப்டனாக திரும்பிய தோனி தன் முதல் போட்டியில், ‘ மஞ்சள் நிற ஜெர்சியில் ‘ இது தன் கடைசி சீசன் அல்ல எனக் குறிப்பிட்டார். இதைக் கேட்டு ரசிகர்கள் அனைவரும் ஆனந்தத்தில் குத்திதனர்.

- Advertisement -

டாஸ் போடும் போது டேனி மோரிஸனிடம் தோனி, “ நீங்கள் நிச்சயம் என்னை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்ப்பீர்கள். அது நான் தற்போது அணிந்திருக்கும் சென்னை ஜெர்சியாக இருக்கலாம் ஆலது வேறு மஞ்சள் நிற ஜெர்சியாக கூட இருக்கலாம். அதை நீங்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ” என்றார்.

தோனியுடன் 3 ஆண்டுகள் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்துக் கொண்ட ஷேன் வாட்சன், தோனியின் இந்த குழப்பாமான பேச்சிற்கு தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “ அவர் வேறு மஞ்சள் ஜெர்சி எனக் குறிப்பிட்டது பயிற்சியாளர் ஜெர்சி என நான் நினைக்கிறேன். அவர் கிரிக்கெட் விளையாடுவதை முடித்தப் பிறகு, சி.எஸ்.கேயில் ஈடுபடுவதைத் தவிர, வேறு ஏதாவது செய்தால் நான் அதிர்ச்சியடைவேன். ” எனக் கூறினார் ஷேன் வாட்சன்.

மேலும் அவர் கூறியதாவது, “ தோனி என்றால் முழுக்க முழுக்க சி.எஸ்.கே தான். நான் அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். அவர் பயிற்சியாளராக அல்லது தலைமை இயக்குனராக ஈடுபட விரும்புகிறார் என்பது எனக்குத் தெரியும். வரும் காலங்களில் அவர் அந்த பணியை செய்யாவிட்டால் அது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். எந்த அவசரமும் இல்லை, அவர் இன்னும் ஒரு தனிப்பட்ட வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகிறார். ”

- Advertisement -

ஐபிஎலில் இருந்து ஓய்வு பெற்றப் பின் சென்னை அணியின் பயிற்சியாளராக தோனியை பார்க்க வேண்டும் என்பதே அனைவரது ஆசையும். அதை அவர் நிச்சயம் செய்வார் என நம்புவோம்.