இப்படியொரு வலுவான ஐபிஎல் அணியை இந்த அணி மட்டும் எப்படி உருவாக்கினார்கள் என்றே புரியவில்லை – ஷேன் வாட்சன் ஆச்சரியம்

0
8304
Shane Watson IPL 2022

ஐ.பி.எல்-ல் மறக்க முடியாத ஒரு வீரர். முதல் ஐ.பி.எல் தொடரில் இராஜஸ்தான் அணி கோப்பையை வெல்ல, அணித்தலைவரான சமீபத்தில் மறைந்த ஷேன் வார்னேவுக்குத் தளபதியாய் இருந்து, முதல் தொடரில் இராஜஸ்தான் அணி சாம்பியன் ஆவதற்கு முக்கியக்காரணமாய் இருந்தவர்.

ஐ.பி.எல் முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்ட 2008-ஆம் ஆண்டிலிருந்து எட்டு ஆண்டுகள் 2015-ஆம் ஆண்டு வரை இராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். பின்பு 2016-17 ஐ.பி.எல் சீசன்களில் பெங்களூர் அணிக்காவும், அடுத்து 2018-19-20 ஆகிய மூன்று ஆண்டுகளும் சென்னைக்காக விளையாடினார்.

- Advertisement -

இத்தோடு ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்ட ஷேன் வாட்சன், தற்போது ஐ.பி.எல்-ல் ரிக்கி பாண்டிங் தலைமைப் பயிற்சியாளராய் இருக்கும் டெல்லி அணிக்கு துணைப் பயிற்சியாளராய் இருக்கிறார். இவர் தனது பழைய அணியான இராஜஸ்தான் இராயல்ஸ் பற்றியும், தற்போதைய ஐ.பி.எல் தொடரில் ஆட்டத்தின் முடிவுகளில் முக்கியப்பங்கு வகிக்கும் பனிப்பொழிவு பற்றியும் பேசியிருக்கிறார்.

அதில் அவர் “சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி எனது பழைய அணியான இராஜஸ்தான் அணி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அவர்கள் சரிசமமான பலம் கொண்ட அணியாக இருக்கிறார்கள். இராஜஸ்தானுக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், பெங்களூருக்காக விளையாடிய படிக்கல், கொல்கத்தாவுக்காக விளையாடிய பிரசித் கிருஷ்ணா, டெல்லி அணிக்காக விளையாடிய ஹெட்மயர் ஆகிய வீரர்கள் அணிக்குக் கிடைத்திருக்கிறார். ஹெட்மயர் சிறந்த பவர்-ஹிட்டர். இதனால் இந்த அணியின் பலம் வலிமையா இருக்கிறது. இவர்கள் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். எப்படி இப்படிப்பட்ட சிறந்த அணியை ஒருங்கிணைத்தார்கள் என்று புரியவில்லை” என்று கூறினார்.

மேலும் பனிப்பொழிவு பற்றி பேசிய அவர் “ஆட்டத்தில் எல்லாம் தாண்டி பனிப்பொழிவு தனித்து தெரிகிறது. பனிப்பொழிவில் பந்தை இறுக்கி பிடிப்பது, பந்து வீசுவது சிரமமான காரியம். வெப்பம், பனிப்பொழிவு இதெல்லாம் எப்படி அமைகிறதென்று புரியவில்லை. இந்தத் தொடர் முழுவதும், தண்ணீர் இருக்கும் வாளியில் பந்தை போட்டு, அதில் பயிற்சி செய்துவதுதான் வழியாய் இருக்கும்” என்று தெரிவித்தார்.

- Advertisement -