ஐபிஎல் 2025

சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை.. ஆர்சிபி இத செஞ்சா மட்டுமே தப்பிக்க முடியும் – ஷேன் வாட்சன் அறிவுரை

நடப்பு ஐபிஎல் தொடரில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ளும் மிக முக்கியமான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி என்ன செய்தால் வெற்றி பெற முடியும் என்பது குறித்து ஷேன் வாட்சன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியை விட, நாளை சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ள இருக்கும் போட்டிக்கு அதிக எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. காரணம் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் காரணமாக இரு அணி ரசிகர்களுக்கும் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சிஎஸ்கே அணியின் பலம்

தற்போது அமைக்கப்பட்டிருக்கும் சிஎஸ்கே அணி முழுக்க முழுக்க சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சாதகமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு மிக அதிக சாதகத்தை கொடுக்கக் கூடிய வகையில் இருக்கிறது. இதன் காரணமாக அஸ்வின் ஜடேஜா மற்றும் நூர் அகமத் சிஎஸ்கே அணிக்கு பெரிய தாக்கத்தை உண்டாக்கக்கூடியவர்களாக மாறுகிறார்கள்.

அதே சமயத்தில் ஆர்சிபி அணி கொல்கத்தா அணியை அவர்களது சொந்த இடத்தில் வைத்து வென்று வருகிறது. சுழல் பந்து வீச்சில் கொஞ்சம் பின்னடைவுகள் இருந்தாலும் கூட கடைசி போட்டியில் குர்னால் பாண்டியா சிறப்பாக இருந்தார். மேலும் ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் சுயாஸ் ஷர்மாவை ஆர்சிபி அணி தொடர்ந்து ஆதரிக்கிறது. மேலும் வேகப்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் யூனிட் சிறப்பாக இருக்கிறது. எனவே அவர்களும் நம்பிக்கை உடன் வருகிறார்கள்.

- Advertisement -

ஆர்சிபி அணி இதை செய்ய வேண்டும்

இதுகுறித்து ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு விளையாடி இருக்கும் ஷேன் வாட்சன் கூறும் பொழுது “ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்வது மிகப்பெரிய சவாலாக அமையும். சிஎஸ்கே அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்களின் தரத்தைக் கொண்டு ஆர்சிபி அணியை மாற்றி அமைக்க வேண்டியதாக கூட அமையலாம். ஆனால் அதில் எந்த தவறையும் செய்து விடக்கூடாது. இல்லையென்றால் பெரிய சிக்கல் ஆக மாறிவிடும்”

இதையும் படிங்க : டிராவிட் எடுத்த முடிவுகள் குப்பையானது.. ராஜஸ்தான் டீம் தேவையில்லாம சிக்கிட்டாங்க சைமன் டால் விமர்சனம்

“சிஎஸ்கே அணியின் முழு அமைப்பும் சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக இருக்கும் படி அமைக்கப்பட்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மூன்று சுழல் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். இது அவர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கும். அதே சமயத்தில் நூர் அகமத் உள்ளே வந்ததும் விக்கெட்டுகள் கைப்பற்றிய விதம் ஒட்டுமொத்த அணிக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கி இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by