7 வருடங்களுக்கு முன்பே ஹெட்டை கணித்த ஷேன் வார்னே.. வைரலாகும் ட்வீட்!

0
406
Head

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் சிறப்பான ஒன்று. ஏனென்றால் அவர்கள் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சந்தித்த சிறந்த அணி இந்திய அணிதான்.

மேலும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு வருவதற்கு முன்னால் மூன்று ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தொடர்ந்து ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்து இருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து மீண்டும் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளையும் ஆஸ்திரேலியா தோற்று இருந்தது.

மேலும் ஒரு பின்னடைவாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகர் காயத்தின் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு கிடைக்கவில்லை. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் இது ஆஸ்திரேலியா அணிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

இன்னொரு பக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த நட்சத்திர வீரராக உருவெடுத்த டிராவிட் ஹெட் கைவிரல் முறிந்து உலகக்கோப்பை தொடரின் ஆரம்பகட்டங்களில் ஆஸ்திரேலிய அணிக்கு கிடைக்கவில்லை.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையிலும் கூட டிராவிஸ் ஹெட்டை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து ஆஸ்திரேலியா உலகக் கோப்பை அணியில் வைத்தது. இது வேறெந்த ஆஸ்திரேலியா அணியும் செய்திருக்காத ஒன்றுதான்.

இந்த நிலையில் லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வந்த அவர் மிகச் சிறப்பாக விளையாடி அசத்தினார். அதற்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரைஇறுதியில் முக்கியமான அரைசதம் மற்றும் இரண்டு விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் ஆனார்.

இறுதிப்போட்டியில் மிகச்சிறப்பாக பீல்டிங் செய்து ரோகித் சர்மாவை வெளியேற்றியது, மேலும் கடினமான நேரத்தில் பேட்டிங் செய்து அபாரமான சதம் அடித்தது என மீண்டும் இறுதிப் போட்டியிலும் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியா இவரை தக்க வைத்ததற்கு சரியான நியாயத்தை செய்தார்.

இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயமாக 2016 ஆம் ஆண்டு இவர் ஆஸ்திரேலியாவுக்கு மிகச் சிறப்பான வீரராக எதிர்காலத்தில் வருவார் என்று, காலம் சென்ற ஆஸ்திரேலியா லெஜெண்ட் ஷேன் வார்னே ட்விட் செய்திருப்பது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் அந்த ட்வீட்டில் கூறும்பொழுது “நான் ஒரு கிரிக்கெட் வீரராக டிராவிஸ் ஹெட்டின் பெரிய ரசிகன். அவர் அனைத்து வகையான கிரிக்கெட் வடிவத்திலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிர்கால நட்சத்திரமாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!