சமியை பும்ராவுக்கு சரியான வீரரென்று சொல்லாதீங்க – கடுப்பான முன்னாள் வீரர்!

0
245

முகமது சமி பும்ராவிற்கு நிகரான வீரரே கிடையாது என கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் தீவிரமாக இருந்ததால் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா டி20 உலக கோப்பை அணியில் இருந்து விலக்கப்பட்டார். இந்திய அணி ஏற்கனவே பந்துவீச்சில் பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அணியில் இல்லாதது பெருத்த பின்னடைவை தந்தது.

- Advertisement -

ஆகையால் பும்ராவிற்கு மாற்று வீரராக யாரை நியமிப்பார்கள் என்ற குழப்பங்களும் கேள்விகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பும்ராவிற்கு மாற்றாக முகமது சமியை பிசிசிஐ தேர்வு குழு அறிவித்தது.

இதற்கும் பல்வேறு விமர்சனங்கள் வந்தன. ஏனெனில் அவர் 2021 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் தான் கடைசியாக டி20 போட்டிகளில் விளையாடினார். நடுவில் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது பிளேயிங் லெவனில் சமி இல்லை. ஆனாலும் போட்டியின் கடைசி ஓவர் அவருக்கு பந்துவீச கொடுக்கப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதற்கு 11 ரன்கள் தேவை. நான்கு ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெடுகள் வீழ்த்தினார். ஒரு ரன் அவுட்டை விராட்கோலி நிகழ்த்தினார்.

- Advertisement -

இதன் மூலம் பும்ராவுக்கு சரியான மாற்று வீரர் சமி என பலரும் கருதி வந்தனர். இந்த கருத்திற்கு எதிர் மாறாக சுரேஷ் ரெய்னா தனது கருத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா இருவருக்கும் நிகரான வீரரே கிடையாது. இருவரையும் வெளியில் அமர்த்தி விட்டு சரியான மாற்றுவீரரை உங்களால் தேர்வு செய்ய முடியாது. தற்போது உங்கள் கையில் இருக்கும் சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் சமி ஆகிய மூவரில் சமி சரியான வீரராகவும் சிறந்த தேர்வாகவும் இருக்கலாம். ஆனால் அவர் பும்ராவிற்கு ஒருபோதும் மாற்றாக வர இயலாது.” என கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

“சமிக்கு நல்ல துவக்கம் கிடைத்திருக்கிறது. அதனை தொடர் முழுவதும் பயன்படுத்திக் கொண்டு, இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தர வேண்டும்.” என்றும் குறிப்பிட்டார்.