“சமி யார் சொல்றதையும் கேட்கிறது இல்லை.. கபில்தேவ் செஞ்சத அப்படியே செஞ்சிட்டு வராரு!” – சுனில் கவாஸ்கர் சுவாரசியமான பாராட்டு!

0
2134
Shami

இந்திய அணி நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இதன் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைய இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது. நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து முதல் அணியாக வெளியேறுவது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி நேற்று முதலில் பேட்டிங் செய்து 229 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி முதல் 30 ரன்கள் மிக வேகமாக கொண்டு வந்தது. இதை பார்த்த பொழுது இங்கிலாந்து தோல்விகளில் இருந்து மீண்டு வந்து விடும் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் இந்த நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் முடக்கி போட்டு விட்டார்கள். அவர்களிடம் சிக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடைசி வரை மீளவே முடியவில்லை. இறுதியாக இங்கிலாந்து அணி 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நேற்று முகமது சமியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவர் குறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது “அங்கே நிறைய கடின உழைப்பு இருக்கிறது. அவர் தன்னுடைய வீட்டில் நிறைய ஆடுகளங்களை உருவாக்கி இருக்கிறார். அதே சமயத்தில் அங்கு அவர் பந்து வீசி பயிற்சி பெறுகிறார் அதுதான் முக்கியமான விஷயம்.

- Advertisement -

அவர் தனது தனிப்பட்ட கிரிக்கெட் உடல் தகுதியை எப்படி பார்க்கிறார்? அதில் என்ன சிறப்பு இருக்கிறது?. அவர் வலையில் தொடர்ந்து நிறைய பந்துகள் வீசி பயிற்சி பெறுகிறார். அதுதான் அவருடைய சிறப்பு.

அவர் நாள் முழுவதும் ஜிம்மில் இருப்பவரா என்று தெரியாது. ஆனால் நாள் முடிவில் கபில்தேவ் என்ன செய்வாரோ அதைத்தான் முகமது சமி செய்கிறார். அது வலையில் தொடர்ச்சியாக பந்து வீசிக்கொண்டே இருப்பது.

பயோ மெக்கானிசம் நிபுணர்கள் வலைகளில் 15, 20 பந்துகளுக்கு மேல் வீச வேண்டாம் என்று சொல்வது உண்டு. ஆனால் அவர்கள் சொல்வதை எல்லாம் சமி கேட்பதில்லை. ஒரு வேகப்பந்துவீச்சாளராக அவரின் கால்களுக்கு மைலேஜ் வேண்டும். எனவே ஒரு தொடர்ந்து பந்து வீச ஓடிக்கொண்டே இருக்கிறார்.

அவர் நல்ல ரிதத்தில் இருக்கிறார். அவர் பந்து வீச ஓடுவதை ட்ரோன் கேமரா மூலமாகப் பார்த்தால், சிறுத்தை வேட்டைக்கு துரத்துவது போல இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!